அரசியல்

பேசு தமிழா பேசு : நேர்காணலுக்காக வருகை தந்த திரு.ராம ரவிக்குமார்!

இன்று, நமது ‘பேசு தமிழா பேசு’ சேனல் நேர்காணலுக்காக இந்து தமிழர் கட்சியை சேர்ந்த திரு.ராம ரவிக்குமார் வருகை தந்தார். அவரிடம் நமது நெறியாளர்கள் சமீபத்திய அரசியல் பற்றி பல கேள்விகளை முன்வைத்தார்கள்.

குறிப்பாக இளையராஜா கருத்து பற்றிய சர்ச்சை, ராமநவமி அன்று வடஇந்தியாவில் ஏற்பட்ட கலவரங்கள், வடஇந்தியாவில் இஸ்லாமியர்கள் வீடுகள் இடிக்கப்படுவது, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அவர்களை காஞ்சி சங்கராச்சாரியார் அவமதித்துவிட்டாரா? தமிழக கேரளா எல்லையில் இருக்கும் கண்ணகி கோயில் பறிபோனது என பல கேள்விகளை முன்வைத்தோம்.

அனைத்து கேள்விகளுக்கும் விரிவாகவும், சிறப்பாகவும் திரு.ராம ரவிகுமார் அவர்கள் பதிலளித்தார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் இந்த நேர்காணல் சென்றது. நேர்காணல் முடிந்ததும் நமது ‘பேசு தமிழா பேசு’ குழு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இந்த நேர்காணலுக்கான எடிட்டிங் வேலை சென்று கொண்டிருக்கிறது.

திரு.ராம ரவிக்குமார் அவர்களின் நேர்காணல் திங்கட்கிழமை வெளியாகும். நேர்காணல் வெளியானதும் பாருங்கள் பகிருங்கள். இதுபோல பல அரசியல் கட்சியினர் அளித்த நேர்காணல்கள் நமது பேசு தமிழா பேசு வளையொலியில் இருக்கிறது, அதையும் பாருங்கள் பகிருங்கள். நமது ‘பேசு தமிழா பேசு’ வலையொளியை subscribe செய்து இணைந்திருங்கள்.

Related posts