சமூகம்தமிழ்நாடுவணிகம்

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு 27 ஆண்டுகள் சிறை !

திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.

மோசடி வழக்கு 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாசி நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் முதலீடுயில் மோசடி செய்துள்ளனர். இதில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நிறுவனத்தின் இயக்குனர்கள் கே.மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் இயக்குனர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதிகள், இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் 171.74 கோடி
ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

Related posts