தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்ட இறுதியில் வாகுவத்தில் முடிந்துள்ளது.
மாவட்ட ஊராட்சி கூட்டம்
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினர். துணைத்தலைவர் உதயகிருஷ்ணன் மற்றும் செயலாளர் க.ருக்மணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் கனிமொழி, ‘தலைவர் வார்டுக்கு ரூ.1 கோடியும் மற்றும் துணைத் தலைவர் வார்டுக்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மற்ற பகுதிகளுக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவருக்கும் சரி சமமாக நிதி பங்கிட்டை கொடுக்க வேண்டும்’ கூறினார். இதே கருத்தை வலியுறுத்தி கவுன்சிலர் மாரிமுத்துவும் பேசினார். இதுதொடர்பாக கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கூட்டம் முடிவடைந்ததாக கூறியுள்ளனர். அத்துடன் கூட்டம் முடிவடைந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

