சமூகம்தமிழ்நாடு

விருதுநகர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய திருப்புமுனை – சிறுவன் கூறிய திடுக்கிடும் தகவல் !

விருதுநகரில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்தான் தன்னை பாலியல் தூண்டலுக்கு கட்டாயப்படுத்தியதாக ஜாமினில் வெளிவந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில், 22 வயது இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பிரவீன், அஹமது, மாடசாமி, ஹரிஹரன் உள்ளிட்ட எட்டு பேரை விருதுநகர் காவல் துறையினர் மார்ச் 19 -இல் கைது செய்தனர். அதில் நான்கு சிறுவர்களும் அடங்குவர். இந்நிலையில் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த 4 சிறுவர்கள் ஜாமினில் வெளிவந்தனர்.

அவர்களில் ஒரு சிறுவன், தமிழக முதல்வர், ‘போக்சோ’ நீதிமன்ற நீதிபதி, கலெக்டர், எஸ்.பி., உயர் நீதிமன்ற பதிவாளர், உள்துறை செயலர், ஐ.ஜி., டி.ஐ.ஜி., குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சட்ட உதவி மைய தலைவர் ஆகியோர்களுக்கு புகார் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஹரிஹரன் மூலம் அந்தப்பெண் எனக்கு பழக்கமானார். சிறுவர்களான எங்களை அந்தபெண் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக அழைத்து, கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார். ‘வெளியில் கூறினால் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் பாதிப்பு ஏற்படும்’ எனக் கூறி எங்களை மிரட்டினார்.

போலீசார் எங்களை கைது செய்தபோது விபரத்தை கூறினேன். இளம்பெண்ணின் மொபைல் போனை பார்த்தால் உண்மை தெரியும் என்று கூறினேன். ஆனால், போலீசார் நான் கூறியதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு சென்ற பின் அவர்களிடமும் தெரிவித்தேன். அவர்களும் அதை ஏற்று கொள்ளவில்லை.அதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சீர்திருத்த பள்ளியில் இருந்தபோது, இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் வெளியே வந்தேன். என்னை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த அந்தப் பெண்மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அந்த சிறுவன் குறிப்பிட்டுள்ளார். இந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, அகமது ஆகிய மற்றும் நாலு பேரின் சிறை காவல் மே 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts