“டாணாக்காரன்” திரைப்படம் விக்ரம் பிரபு நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் நேற்று (ஏப்ரல் 8) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
கதை களம்
இளம் போலீஸ் பயிற்சியாளர்கள் ட்ரைனிங் முகாமில் எதிர்கொள்ளும் கஷ்டங்களை இப்படம் வெளிப்படுத்துகிறது. பயிற்சியின் போது மூத்த அதிகாரிகள் சர்வாதிகார போக்கில் செய்யும் தவறுகளைக் கேள்வி கேட்கும் ஆக்ரோஷமான பயிற்சியாளராக விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். அவர் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதைக்களமாகும்.
படக்குழு:
கதாநாயகன் : விக்ரம் பிரபு (பயிற்சியாளர்).
கதாநாயகி : அஞ்சலி நாயர் (காவல் அதிகாரி).
வில்லன்-1 : சஞ்சய் குமார் (கமாண்டன்ட்).
வில்லன்-2 : லால் (எ.டி).
முக்கிய கதாப்பாத்திரத்தில் : எம்.எஸ். பாஸ்கர் (எ.டி).
இசை : ஜிஹிப்ரான்.
ஒளிப்பதிவு : மாதேஷ் மாணிக்கம்.
ஒலிப்பதிவு : ராஜு ஆல்பர்ட் மற்றும் குழு.
கதாநாயகியான அஞ்சலி நாயரின் மூன்றாவது திரைப்படம் டாணாக்காரன். இவர் ஜெய்யின் எண்ணித் துணிக படத்தில் துணை நடிகையாக இருந்தவர். பின்பு, நெடுநல்வாடை என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். டாணாக்காரன் படத்தில் அஞ்சலியின் கதாப்பாத்திரம் கதையுடன் அமைந்ததால் ரசிக்கும் படி இருந்தது.
முதல் பாகம்
கதையின் தொடக்கத்திலேயே பயிற்சியாளர்களை அதிகாரிகள் நடத்தும் விதம் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது. முதல் பாகம் முழுவதும் சுவாரசியம் நிறைந்தப்படி இருந்ததால், பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படவில்லை. தேவையில்லாமல் பாடல்களும், வசனங்களும் இல்லாததால் முதல் பாகம் அருமையாக இருந்தது.
இரண்டாம் பாகம்
ஆனால், இரண்டாம் பாகத்தில் தமிழ் சினிமாவின் வழக்கப்படி கதையும், கதாப்பாத்திரமும் அமைந்திருந்தன. இதனால், பல இடங்களில் சலிப்புத் தன்மை ஏற்பட்டது. கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என பார்வையாளர்கள் உணரும் விதமாக படம் நகர்ந்தது. இருப்பினும், விக்ரம் பிரபு படங்களில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
டாணாக்காரன் திரைப்படத்தின் அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது?