ஓடிடி ரிலீஸ்
கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது.
இந்நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வருகிற 13-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
take an unvarnished look at the gangster world #VendhuThanindhathuKaaduOnPrime, Oct 13 pic.twitter.com/kixtugRSqV
— prime video IN (@PrimeVideoIN) October 11, 2022

