Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»இன்று புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் சசிகலா? ஜெயலலிதா பிறந்தநாளில் முக்கிய முடிவு

இன்று புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் சசிகலா? ஜெயலலிதா பிறந்தநாளில் முக்கிய முடிவு

February 24, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஜெயலலிதா பிறந்தநாளான இன்று பசும்பொன்னில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வைத்து சில முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும், அதில் நல்ல தகவல்களை சொல்ல இருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிமுக, அமமுக, கட்சிகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, இன்று பசும்பொன்னில் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக 2026 சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று (பிப். 23) மெரினா கடற்கரைக்கு சென்ற சசிகலா, அங்குள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எங்களுடைய தலைவர்களான அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் நானும் பயணிக்கிறேன். நாளை (பிப் 24) பசும்பொன்னில் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். அதில் சில முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளோம். அதற்கு முன்பு ஜெயலலிதாவிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக வந்தேன்” என்றார்.

இதையும் படிக்க :  'என் வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் பாடம் என்பது என் தந்தையின் மரணம்' - மாநாட்டில் ராகுல்காந்தி பேட்டி!

அவரிடம் இன்று கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகிறதா என்று கேட்டதற்கு, “நாளைய (பிப் 24) நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதாவும், அறிஞர் அண்ணாவும் மக்கள் மனதில் இருக்கின்றனர். அதனால் அவர்களிடம் வேண்டிக்கொண்டு நாளை நல்ல தகவலை சொல்கிறேன்” என பதிலளித்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டியாக தேர்தல் களம் உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சியினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி), ஐஜேகே, தமாக, அமமுக, புதிய நீதி கட்சி, தமிழக முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

இதையும் படிக்க :  அதிமுக : வரும் 17ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் !

அதேபோல், திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, தேமுதிக தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தொடர்கின்றன.

அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையை துவங்கி தொகுதி பங்கீட்டுக்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் மட்டும் அரசியல் களத்தில் தனித்துவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில், பசும்பொன்னில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தின் வாயிலாக தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை சசிகலா அறிவிப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை
Next Article ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை’ – அதிமுக 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.