Foxconn நிறுவனம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு நடத்தியதாகவும், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாகவும் திமுக அரசு அறிவித்தது.
பொம்மை முதல்வரோ இது தான் செயலில் ஸ்டாலின் மாடல் என்று மார்தட்டிக் கொண்டார்.
இந்நிலையில், Foxconn நிறுவனம் அத்தகைய முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க என்ற ஸ்டாலினின் பொன்மொழியை, அவருக்கே நினைவுபடுத்த விழைகிறோம்.
ஏனெனில் பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும்.
ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் பொம்மை முதல்வர் அதனால் தமிழகத்திற்கு கிடைத்தது என்னவென்று கேட்டால் அதற்கு இவர்களின் பதில், வெற்று பேப்பர்
அது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? நேற்று அம்பலப்பட்டுள்ள இந்த பொய் என்பது, பொய்களே உருவான இந்த விடியா ஆட்சி விரைவில் அம்பலப்பட்டு வீழப் போவதற்கு சாட்சி!
கூகுள் நிறுவனம் கூட, பல்லாயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று அறிவித்துள்ளது.
ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத, திறமையற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் வளமான தமிழ்நாட்டைக் கட்டமைக்க ஒரே வழி, 2026-ல் அதிமுக ஆட்சி அமைவதே! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

