Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»டிஜிட்டல் மோசடிகளில் பணம் இழந்தால் வங்கி மூலம் ரூ.25,000 இழப்பீடு பெறலாம்

டிஜிட்டல் மோசடிகளில் பணம் இழந்தால் வங்கி மூலம் ரூ.25,000 இழப்பீடு பெறலாம்

February 7, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘டிஜிட்​டல் மோசடிகளில் பணத்தை இழப்​பவர்​களுக்கு, வங்கி மூலம் ரூ.25,000 இழப்​பீடு வழங்​கப்​படும்’’ என்று ரிசர்வ் வங்கி கவர்​னர் சஞ்​சய் மல்​ஹோத்ரா அறி​வித்​துள்​ளார்.

கடந்த 4-ம் தேதி தொடங்கி ரிசர்வ் வங்​கி​யின் நிதிக் கொள்கை குழுக் கூட்டம் மும்பை​யில் 3 நாட்கள் நடந்தது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி கவர்​னர் சஞ்​சய் மல்​ஹோத்ரா மும்​பை​யில் நேற்று செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 2025-ம் ஆண்டு நாடு முழு​வதும் நடை​பெற்ற டிஜிட்​டல் மோசடிகளில் சுமார் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த மோசடிகளால் சுமார் 21 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் நேரடி​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ளனர்.

கடந்த 2017-ம் ஆண்​டில் வெளி​யிடப்​பட்ட வழி​காட்டு நெறிகளின்​படி டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை​களில் ஏற்​படும் இழப்​பு​களுக்கு வாடிக்​கை​யாளரே பொறுப்பு என்று கூறப்​பட்டுள்​ளது. இதன் ​காரண​மாக டிஜிட்​டல் மோசடிகளால் பாதிக்​கப்​படும் நபர்​களுக்கு இழப்​பீடு கிடைப்​பது இல்​லை. இந்தச் சூழலில் டிஜிட்​டல் மோசடிகளைத் தடுக்க விரை​வில் 3 வரைவுக் கொள்​கைகள் வெளி​யிடப்​படும். இதுதொடர்​பாக பொது​மக்​கள் மற்​றும் வங்கித் துறை சார்ந்த நிபுணர்​களின் கருத்​துகள் கேட்​டறியப்​படும்.

முதல் வரைவு கொள்​கை​யில், டிஜிட்​டல் மோசடிகளால் பாதிக்​கப்​படும் நபர்​களுக்கு இழப்​பீடு கிடைக்க வழி​வகை செய்​யப்​படும். டிஜிட்​டல் மோசடிகளில் பணத்தை இழக்​கும் நபருக்கு சம்​பந்​தப்​பட்ட வங்கி நிர்​வாகம் சார்​பில் அதி​கபட்​ச​மாக ரூ.25,000 இழப்​பீடு வழங்​கப்​படும்.

இதையும் படிக்க :  லாட்டரி டிக்கெட்: ஷார்ஜாவில் இந்திய டிரைவருக்கு ரூ.10 கோடி பரிசு

முதியோர் பணம்: டிஜிட்​டல் மோசடிகளில் பெரும்​பாலும் மூத்த குடிமக்​களே அதி​கம் பாதிக்​கப்​படு​கின்​றனர். இதை தடுக்க முதி​யோர் மேற்​கொள்​ளும் டிஜிட்​டல் பரிவர்த்​தனை​களில் பணப் பரி​மாற்​றம் தாமத​மாக நடை​பெற நடவடிக்கை எடுக்​கப்​படும். இரண்​டாவது வரைவு கொள்​கை​யில், டிஜிட்​டல் மோசடிகளை தடுக்க கடுமை​யான விதி​முறை​கள் வரையறுக்​கப்​படும்.

மூன்​றாவது வரைவு கொள்​கை​யில், வாடிக்​கை​யாளர்​களிடம் இருந்து கடனை நியாய​மான முறை​யில் வசூலிக்க விதி​கள் உரு​வாக்​கப்​படும். குறிப்​பாக 3-ம் தரப்பு மூலம் கடன் தொகையை வசூலிக்​கும் நடவடிக்கை ஒழுங்​குபடுத்​தப்​படும்.

நகர்ப்​புற கூட்​டுறவு வங்​கி​களின் செயல்​பாடு​களை மேம்​படுத்த சஹகாரி வங்கி கஷம்தா நிர்​மான் என்ற திட்​டம் தொடங்​கப்​படு​கிறது. இந்த திட்​டத்​தின்​படி 1.4 லட்​சம் கூட்​டுறவு வங்​கி​களின் ஊழியர்​களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்​கப்​படும். குறிப்​பாக வங்கி நிர்​வாகம், தொழில்​நுட்​பம் சார்ந்து ஊழியர்​களுக்கு பயிற்​சிகள் வழங்​கப்​படும்.

இதன்​மூலம் நகர்ப்​புற கூட்​டுறவு வங்​கி​களின் செயல்​பாடு​கள் மேம்​படுத்​தப்​படும். கூட்​டுறவு வங்​கி​கள் வழங்​கும் தனி​நபர் கடன்​களின் வரம்பை அதி​கரிக்க பரிந்​துரை செய்​கிறோம். இவ்​வாறு ரிசர்வ் வங்கி கவர்​னர் சஞ்​சய் மல்​ஹோத்ரா தெரி​வித்​தார்.

இதையும் படிக்க :  பென்சிலின் வர்த்தக வரலாறு - சிறு பார்வை

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரெப்போ வட்டி விகிதம் குறித்து சஞ்சய் மல்ஹோத்ரா மேலும் கூறியதாவது: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே நீடிக்கும்.

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5 சதவீதமாக இருக்கும். இரண்டாம் காலாண்டில் 7 சதவீதம், மூன்றாம் காலாண்டில் 7 சதவீதம், நான்காம் காலாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக 2026-ம் ஆண்டின் ஜிடிபி 7.4 சதவீதமாக இருக்கும். நாட்டின் பண வீக்கம் 2.1 சதவீதமாக நீடிக்கும். இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப் படாததால் பொதுமக்கள் பெற்றுள்ள வீடு, வாகன கடன்களுக்கான வட்டியிலும் மாற்றம் இருக்காது என்று பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous ArticleT20 WC 2026 அலசல்: ஒரு மோசமான ஓவர்… ஒரு ட்ராப் கேட்ச்… வெற்றியை கோட்டை விட்ட நெதர்லாந்து!
Next Article இந்திய – மலேசிய பாதுகாப்பு, பொருளாதார உறவுகள் மேம்படுத்தப்படும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.