இந்தியா

ராமர் பால விவகாரம்: இதுவரை நடந்தது என்ன?

இந்தியாவின் நெடுங்கால விவாதங்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் ராமர் பால விவகாரத்துக்கு அதில் நிச்சயம் இடமுண்டு. அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான வாதப்பிரதிவாதங்களால் அரசியலாக மாறி நிற்கும் இந்த விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.

காரணம், சர்ச்சைக்குரிய, ‘ராமர் பாலம்’ என்று சொல்லப்படுகிற மணற்திட்டுகளை, வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கு இன்று (09.03.2022) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், இந்த வழக்குக்கான பின்னணியை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.