Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»10.5% இடஒதுக்கீட்டை வழங்காமல் இன்னும் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது? டாக்டர் ராமதாஸ் கேள்வி

10.5% இடஒதுக்கீட்டை வழங்காமல் இன்னும் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது? டாக்டர் ராமதாஸ் கேள்வி

February 2, 20261 Min Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்காமல் இன்னும் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்க போகிறது என டாக்டர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

வன்னியர்களுக்காக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் அதனை செயல்படுத்த சில வழிகாட்டுதல்களை வழங்கிய பின்பும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக திமுக அரசு வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத காரணத்தால் வன்னிய இளைஞர்கள் பலர் கல்வி கற்க முடியாமலும் வேலைவாய்ப்பினை பெற முடியாமலும் தவித்து வருகின்றார்கள் .

இதையும் படிக்க :  இந்திரா காந்தி நினைவு தினம் : ராகுல் காந்தி உருக்கமான பதிவு!

இந்நிலையில் வேலை கிடைக்காமல் விரக்தியில் இளைஞர் தற்கொலை என்கிற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையில் உள்ளேன். இதற்குத்தானே ஒவ்வொரு அரசிடமும் மன்றாடி கேட்கின்றேன். வன்னியர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாத அரசுகளை கண்டித்து தொடர்ந்து போராடி வந்து கொண்டிருக்கின்றேன். இதுபோல் இன்னும் எத்தனை பிணங்களை இந்த ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இட ஒதுக்கீடு ஒன்றும் ஆட்சியாளர்கள் போடும் பிச்சை அல்ல அது தமிழகத்தில் வாழும் மக்களினுடைய உரிமை பங்காகும். அதை வழங்காமல் இழுத்து அடித்து இதுபோல் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது?

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கண்ணமங்கலம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கந்தன், பூங்கொடி  தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சதீஷ்குமார் பட்டப்படிப்பு படித்துவிட்டு கட்டிட தொழிலாளியாக வேலை செய்கிறார்.

இத்தம்பதியினரின் இளைய மகன் விஜயகுமார் (28)  2018-ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு வேலைக்கு அரசு போட்டித் தேர்வுகளை எழுதி வந்தள்ளார்.

இந்நிலையில் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியால் இன்று தைபூச திருவிழாவிற்கு குடும்பத்தினர் கோயிலுக்கு சென்றுவிட்ட நிலையில் தனியே வீட்டில் இருந்த விஜயகுமார்  தனது டைரியில் வேண்டும் வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு என எழுதி வைத்து அதை தனது கையில் இறுகப்பற்றியவாரே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

கோயிலிலிருந்து வீட்டுக்கு வந்த கந்தன் மற்றும் பூங்கொடி உள்ளிட்ட உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தான் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட விஜயகுமாரின் உடலை கண்ணமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் கைப்பற்றி, விஜய்குமார் இறக்கும்போது கைப்பட எழுதிய கடிதம் மற்றும் அவரின் டைரியில் சில பக்கங்களில் எழுதிய வாக்கு மூலத்தையும் கண்ணமங்கலம் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிக்க :  என் நாட்டை இழக்க மாட்டேன் - ராகுல் காந்தி நம்பிக்கை !

பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் போலீசார் சடலத்தை கைப்பற்றிய போது டைரி மற்றும் லெட்டர் ஏதும் கைப்பற்றவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.  இதனை மூடிமறைக்க குடும்பத்தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக இறந்த விஜய்குமாரின் பெற்றோரை புகார் அளிக்குமாறு திமுகவினர் கட்டாயப்படுத்துகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நீட் தேர்வு மூலம் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.  அதனுடன்  திமுக அரசின் சூழ்ச்சியால் உயர்நீதிமன்றம்  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்ததால்  தற்கொலைகள்  மேலும் நீள்கிறது. இன்னும் எத்தனை இளைஞர்களை  இந்த  அரசு  காவு  வாங்க  உள்ளது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்விக்குறியாக உள்ளது.

இறந்த விஜயகுமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். மேலும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன். விஜயகுமாரின் இறப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. எதற்கும் தற்கொலை தீர்வல்ல. குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக பாமகவினர் உடன் இருப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதைப்பூச திருவிழா: சிலுவம்பாளையம் முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்
Next Article பட்டதாரிகளின் சாபம் திமுகவை வீழ்த்தும்! அன்புமணி காட்டம்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.