அதிமுக கூட்டணியில் சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ஆர்.வி.பரதன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகளும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸ் 5 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ள இதர கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி அதிமுக கூட்டணியில் சிங்கத்தமிழர் முன்னேற்ற கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ஆர்.வி.பரதன் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் அல்லது மணச்சநல்லூர் ஆகிய 2 தொகுதிகளில் ஒன்றில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளோம். எந்த தொகுதி என்பதை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்றும் ஆர்.வி.பரதன் தெரிவித்துள்ளார்.

