Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, April 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»ஆட்டோ காஸ் கிடைப்பதில் சிக்கல்: எரிவாயுவால் இயங்கும் வாகனங்களை இயக்குபவர்கள் தவிப்பு

ஆட்டோ காஸ் கிடைப்பதில் சிக்கல்: எரிவாயுவால் இயங்கும் வாகனங்களை இயக்குபவர்கள் தவிப்பு

March 12, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அமெரிக்கா- ஈரான் இடையே நீடிக்கும் போரின் காரணமாக ஆட்டோ காஸ் பங்குகளுக்கு விநியோகம் குறைந்துவிட்டதால், சேலம் மாவட்டத்தில் பல பங்க்குகளில், ஆட்டோக்கள், கார்களுக்கு குறைந்த அளவே எரிவாயு விற்கப்படுகிறது.

அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரால், வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், எரிவாயுவால் இயங்கும் வாகனங்களுக்கும் போதுமான எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு பங்க்குகளில் எரிவாயு இருப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், பல பங்க்குகளுக்கு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ஆட்டோ எல்பிஜி எரிவாயு பங்க் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: போர் தொடங்கிய அடுத்த சில நாட்களில் இருந்தே, பங்க்குகளுக்கு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது. பல பங்க்குகளில் ஏற்கெனவே இருப்பில் இருந்த எரிவாயுவை தொடர்ந்து விற்பனை செய்து வருகிறோம்.

இதையும் படிக்க :  தங்கம் விலை பவுனுக்கு ரூ.85,120 ஆக உயர்ந்துள்ளது

குறிப்பாக, டேங்க் முழுவதையும் நிரப்பாமல் பாதியளவு மட்டுமே எரிவாயு விற்பனை செய்கிறோம். இதனால் உடனடி தட்டுப்பாடு இல்லை. ஆனால் இதுவரை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிவாயு விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. இருப்பு தீர்ந்துவிட்டால், ஆட்டோ எல்பிஜி பங்க்குள் மூடப்படும் நிலை ஏற்படும் என்றனர்.

இது குறித்து ஆட்டோ காஸால் இயங்கும் ஆட்டோ, கார்கள் வைத்துள்ளவர்களில் சிலர் கூறுகையில், ‘வாகனங்களுக்கு வாடிக்கையாக எரிவாயு நிரப்பும் பங்க்குகளில் கூட, குறைந்த அளவுக்கே எரிவாயு கொடுக்கின்றனர்.

குறிப்பாக, பயணிகளுக்கான ஆட்டோக்களுக்கு கூட, குறைந்த அளவே எரிவாயு விற்பனை செய்கின்றனர். அதிலும், கடந்த வாரம் லிட்டர் ரூ.54 ஆக விலை இருந்த நிலையில், தற்போது ரூ.64.50 ஆக விலையும் உயர்ந்துவிட்டது.

இதையும் படிக்க :  சென்னையில் தங்கம் விலை உயர்வு!

பங்க்குகளில் இருப்பு தீர்ந்துவிட்டால், ஆட்டோவை இயக்காமல் வீட்டிலேயே நிறுத்தி வைக்க நேரிடும்’’ என்றனர்.

இதனிடையே, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், உணவகங்கள், தேநீர் விடுதிகள் உள்ளிட்டவை சிக்கலை சந்தித்துள்ளன. உணவகங்கள் பலவற்றிலும் சமையலறையை பாரம்பரிய விறகு அடுப்புக்கு மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ காஸ் பங்க்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சில பங்க்குகளில் ‘போர் பதற்றம் காரணமாக காஸ் இல்லை’ என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் காஸில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்களை பயன்படுத்தி வந்த வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஆட்டோ காஸ் விநியோகத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: பாஜக சார்பில் 15-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
Next Article இந்திய கப்பல்களின் பாதுகாப்பு: ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சு

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,478 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,993 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,478 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,993 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.