Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, September 15
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»“ஏஐ அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்” – டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

“ஏஐ அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்” – டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

February 20, 20263 Mins Read35 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. 4-ம் நாளான நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்க உட்பட 20 நாடுகளின் தலைவர்கள், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வேளாண்மை, பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள், பல்வேறு மொழிகளை அவரவர் விரும்பும் மொழியில் மொழிபெயர்க்கும் தொழில்நுட்பம் என பல்வேறு சவால்களுக்கு டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் மிகச் சிறந்த தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பங்கள் மற்றும் இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டில் இடம்பெற்றுள்ளன.

அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம்; அழிவுக்கும் பயன்படுத்தலாம். அதுபோலத்தான் ஏஐ தொழில்நுட்பமும். இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு காண முடியும். அழிவுக்கு பயன்படுத்தினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். மனிதகுலத்துக்கு பலன் அளிக்கும் வகையில் மட்டுமே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் நன்மை, அனைவருக்கும் மகிழ்ச்சி என்ற கருத்தை முன்னிறுத்தியே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

சில நாடுகள் சுயநலனுடன் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது. ஏஐ மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயன் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோ,ஆடியோக்கள், புகைப்படங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல டிஜிட்டல் உலகில் எது உண்மையான வீடியோ, எது ஏஐதொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஏஐ வீடியோ, புகைப்படங்களை ‘வாட்டர்மார்க்’ குறியீடு மூலம் அடையாளம் காட்ட வேண்டும்.

இதையும் படிக்க :  ம.பி.யில் காதலி கழுத்தை நெரித்துக் கொன்று ஆவியுடன் பேச முயன்ற காதலன்

சிறார் நலன், பாதுகாப்பு ஏஐ தொழில்நுட்ப விவகாரத்தில் சிறாரின் நலன்கள், பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தால் சிறாரின் நலன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. டெல்லி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்களது ஏஐ தொழில்நுட்ப மாதிரிகள், செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இவை இந்திய இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர்.

சில நாடுகள் சுயநலனுடன் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது. ஏஐ மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயன் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோ,ஆடியோக்கள், புகைப்படங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல டிஜிட்டல் உலகில் எது உண்மையான வீடியோ, எது ஏஐதொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஏஐ வீடியோ, புகைப்படங்களை ‘வாட்டர்மார்க்’ குறியீடு மூலம் அடையாளம் காட்ட வேண்டும்.

சிறார் நலன், பாதுகாப்பு ஏஐ தொழில்நுட்ப விவகாரத்தில் சிறாரின் நலன்கள், பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தால் சிறாரின் நலன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. டெல்லி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்களது ஏஐ தொழில்நுட்ப மாதிரிகள், செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இவை இந்திய இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர்.

சர்வதேச அளவில் ஏஐ தொழில்நுட்ப மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. எங்கள் ஏஐ திட்டத்தின் பலனாக நாடு முழுவதும் 38,000 ஜிபியுக்கள் (Graphics Processing Unit) செயல்படுகின்றன. அடுத்த 6 மாதங்களில் மேலும் 24,000 ஜிபியுக்களை நிறுவ உள்ளோம். நாடு முழுவதும் 7,500 டேட்டா மையங்கள், 270 ஏஐ தொழில்நுட்பங்கள் தேசியசொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை தொடங்க அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவில் தயாரித்து உலகத்துக்கு வழங்குங்கள். மனித குலத்தை மேம்படுத்துங்கள். இவ்வாறு பிரதமர் பேசினார்.

இதையும் படிக்க :  செஸ் ஒலிம்பியாட் போட்டி : பிரதமர் மோடி சென்னை வருகை !

தமிழ் உட்பட 11 மொழிகளில்.. இந்தியில் பிரதமர் நிகழ்த்திய உரை, ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி,ஒடியா, பஞ்சாபி, வங்கமொழி, அசாமி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய 11 மொழிகளில் நேரலையாக மொழிபெயர்க்கப்பட்டது. பிரதமர் இந்தியில் பேசப் பேச, மாற்றுத் திறனாளிகளுக்காக திரையில் சைகை மொழியிலும் ஏஐ மூலம் மொழிபெயர்த்து ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் 3 யோசனைகள்: ஏஐ உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக உலகத் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஏஐ தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த 3 யோசனைகளை முன்மொழிகிறேன்.

* ஏஐ தொழில்நுட்ப பயிற்சி தொடர்பாக தெளிவான வழிகாட்டு நெறிகளை வரையறுக்க வேண்டும். குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். *ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீதம் வெளிப்படையாக செயல்பட வேண்டும். அதாவது ஏஐ தொழில்நுட்பங்களைக் கருப்பு குடுவைக்குள் வைத்து மூடாமல், அனைவருக்கும் தெரியும் வகையில் கண்ணாடி குடுவையில் சேமிக்க வேண்டும்.

*எந்த சூழலிலும் ஏஐ தொழில்நுட்பம், மனிதர்களை தோற்கடிக்க அனுமதிக்கக் கூடாது. ஏஐ தொழில்நுட்பத்தை இயக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் மனிதர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும். இந்த 3 கொள்கைகளை அடிப்படையாக வைத்துதான் இந்தியா செயல்படுகிறது. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“எந்த நாடும் செய்ய முடியாததை யுபிஐ மூலம் சாதித்த இந்தியா” – பிரான்ஸ் அதிபர் பாராட்டு
Next Article “முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடக் கூடாது” – சுனில் கவாஸ்கர் அறிவுரை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,171 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,171 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.