Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»அடிபணிந்தது பாகிஸ்தான்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுடன் மோத சம்மதம்

அடிபணிந்தது பாகிஸ்தான்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுடன் மோத சம்மதம்

February 10, 20262 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்போம் எனக் கூறி வந்த பாகிஸ்தான், தற்போது ஐசிசியின் எச்சரிக்கைக்கு பணிந்துள்ளது. அதன்படி, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் அணி சம்மதம் தெரிவித்துள்ளது.

நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதனிடையே, வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அண்மையில் அறிவித்தது.

பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐசிசி, அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு அடுக்கடுக்கான எச்சரிக்கைகளை விடுத்தது. இந்திய அணிக்கு எதிரான போட்டியை புறக்கணித்தால், பாகிஸ்தான் அணிக்கு ஆண்டு நிதி பகிர்வில் 20 சதவீதம் வரை மட்டுமே வழங்கப்படும் என்றும், சர்வதேச தொடர்களில் பங்கேற்க அந்நாட்டு அணிக்கு ஓராண்டு தடைவிதிக்கப்படும் எனவும் ஐசிசி எச்சரித்தது. மேலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்களுக்கு தடைவிதிக்கப்படும் எனவும் ஐசிசி தெரிவித்தது.

இதையும் படிக்க :  இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டோம் - பாகிஸ்தான் அறிவிப்பு; பறந்து வந்த எச்சரிக்கை

ஐசிசியின் இந்த எச்சரிக்கையை சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் அரசு, தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் அந்நாட்டு அணி விளையாடும் என தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஐசிசியின் எச்சரிக்கையை அடுத்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதின. அதில், கிரிக்கெட் நலனுக்காக இந்தியாவுடன் விளையாடுமாறு அந்நாடுகள் கேட்டுக்கொண்டன.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் லாகூரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து, இந்த பேச்சுவார்த்தையில் ஐசிசி விடுத்த எச்சரிக்கை குறித்தும், போட்டியை புறக்கணித்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை சந்தித்து, மொர்சின் நக்வி விளக்கினார்.

இதையும் படிக்க :  'ஏன் ஆல்-ரவுண்டர்கள் தேவை?' இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை விமர்சித்த அக்ஸர் படேல்

இவ்வாறு அடுத்தடுத்து வந்த சர்வதேச அழுத்தத்தின் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் சம்மதித்துள்ளது.

இதனிடையே, டி20 உலகக்கோப்பை தொடரை வங்கதேச அணி புறக்கணித்த நிலையில், அதற்கும் ஐசிசி கடுமையான எச்சரிக்கை விடுத்தது. பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், வங்கதேசம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ஐசிசி தெரிவித்தது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜக போட்டி – பி.எல்.சந்தோஷ் தகவல்
Next Article டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்தானதற்கு நிர்வாகத் திறமையின்மையே காரணம்: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.