Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தார் ஓபிஎஸ் – வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி

அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தார் ஓபிஎஸ் – வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி

February 26, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்த ஓபிஎஸ், தற்போது நல்லவர் வேடம் போடுவது வேடிக்கையாக உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் காவல் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்து பேசினார். பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி தொடர்பாக கூறிய கருத்திற்கு பதிலளித்த வைகைச்செல்வன், ”அவரவர் தங்களுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள அன்புமணி ராமதாஸ் துணைவியார் சௌமியா அன்புமணி இன்று உத்திரமேரூர் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு பாமகவின் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டார். அது நிச்சயமாக அதிமுக என்கிற ஒரு பெரிய வாகனத்தில் ஏறி வெற்றிச் சரித்திரத்தைப் படைக்கும்” எனத் தெரிவித்தார்.

மேலும், சசிகலா தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்தது அரசியலில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய இயக்கம்; அது ஒரு மலை. அந்த மலையோடு மோதினால், தலைதான் உடையும். அவ்வளவுதான், வேறு ஒன்றும் இல்லை. ஏனென்றால் இது தொண்டர்களால் கட்டியமைக்கப்பட்ட இயக்கம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா, அதற்குப் பிறகு எத்தனையோ தலைவர்கள் வந்து பார்த்தார்கள். இன்று எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஆகவே, தொண்டர்களுக்கு யார் துணையாக, தூணாக, அரவணைப்போடு இருக்கிறார்களோ, அவர்களைத்தான் அவர்கள் தலைவராக ஏற்றுக்கொள்வார்கள். அப்படிப்பட்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க :  முஸ்லிம் லீக், மமக.வுக்கு 2 இடங்கள்: திமுக கூட்டணியில் ஒப்பந்தம்

மேலும், பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி ஆரம்பித்து த.வெ.க-விற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, “பண்ருட்டியார் கட்சியில் இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். ஒருவர் பண்ருட்டியார், இன்னொருவர்… உங்களுக்குத் தெரியும், அவர் பொதுச்செயலாளர். ஆகவே, இந்த இரண்டு பேரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?” என்றார்.

தொடர்ந்து, ‘நான் என்ன தவறு செய்தேன்?’ என்று ஓ.பி.எஸ். கேட்டதற்குப் பதிலளித்த அவர், “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக, சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்தார். இரண்டாவதாக, தலைமைக் கழகத்தை அடித்து நொறுக்கினார். மூன்றாவதாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனக்குச் சொந்தம் என்று சொல்லி, பல்வேறு வழக்குகளை அவர் போட்டிருக்கிறார். அந்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவையெல்லாம் தவறுகள்தான்.

இதையும் படிக்க :  சாலை மறியல் செய்த விடுதலை சிறுத்தை கட்சினர் - என்ன காரணமா இருக்கும் ?

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கான பணிகளில் தானும் இணைந்துகொள்ள வேண்டும். இடையூறாக இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நசுக்கி, அதை அடித்து நொறுக்கி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது ஆட்சி கவிழ வேண்டும் என்று நினைத்து எதிர்த்து வாக்களித்தவர்கள், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கானவர்களா? இதை மக்கள் உணர்ந்தும், புரிந்தும் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தை திட்டமிட்டபடி பிப்.27 வெளியிட உயர் நீதிமன்றம் தடை!
Next Article “நீதித்துறையை மதிக்கிறோம்; இனி இப்படி நடக்காது!” – என்சிஇஆர்டி சர்ச்சையில் ‘வருந்திய’ மத்திய கல்வி அமைச்சர்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.