வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு.. இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்
வருமான வரி சட்டப்பிரிவு 234ஏ-ன் கீழ், கடைசி தேதிக்குப் பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், அதில் வருமான வரி நிலுவை இருந்தால், தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் வருமான வரி நிலுவைக்கு 1 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.
வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி கணக்கை வட்டி மற்றும் அபராதத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
இந்த காலக்கெடு அனைவருக்கும் பொருந்தாது.

தனிநபராக வரி செலுத்துவோர், தணிக்கை தேவையில்லாத இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த காலக்கெடு பொருந்தும்.
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், நிதி சார்ந்த பல்வேறு சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, refund பெறுவதில் தாமதம், வரிச் சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும். பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும் போது ஏற்படும் இழப்புகளை சரி செய்வது உட்பட carry forward உள்ளிட்ட பல சலுகைகளையும் இழக்க நேரிடும்.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்படுவதாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது மத்திய அரசு.
கடைசி நாளான நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

