Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தமிழக சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மார்ச் 17-ல் என்டிஏ ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

தமிழக சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மார்ச் 17-ல் என்டிஏ ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

March 13, 20262 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து வரும் மார்ச் 17-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனிசாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

விடியா திமுக அரசு பதவியேற்ற நாள்முதல், தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும்; பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும்; ஆளும் கட்சியினரின் அராஜகங்கள், வன்முறைகள், சட்ட விரோதச் செயல்கள் குறித்தும், அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும், தொடர்ச்சியாக தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையும் படிக்க :  அதிகாரி லஞ்சம் கேட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்; ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள் குறித்த செய்திகளே, நாள்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, சட்டம் -ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்துத் தாக்குதல், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது.

தற்போது, போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழ் நாட்டில் நடைபெறும் மக்கள் விரோதச் செயல்கள் அனைத்தையும் விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

கடந்த ஐந்தாண்டுகால விடியா திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் இத்தனை அவலங்களும் தொடரக் கூடாது. மக்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதற்கெல்லாம் விரைவில் விடிவு காலம் வரஉள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையும் படிக்க :  18 பேரை கடித்து குதறிய தெருநாய்; ஆக்ரோஷமாக கையில் கம்புடன் நாயை தேடி அலையும் மக்கள்

அந்த வகையில், விடியா திமுக அரசு பதவியேற்ற நாள் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இணைந்து வருகின்ற செவ்வாய்க்கிழமை (17.03.2026) அன்று அனைத்து மாவட்ட வருவாய் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” – சீமான்
Next Article அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.