2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சுதந்திர புலிகள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:
மதுரையில் சுதந்திர புலிகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கார்த்திக் மரியாதை நிமித்தமாக சந்தித்து, வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் இயக்கத்தின் முழுமையான ஆதரவு நம் NDA கூட்டணிக்கே இருக்கும் என உறுதியளித்தார்.
இவ்வாறு அந்தப் பதிவில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

