2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மதுரையில் அகில இந்திய மருதுபாண்டியர் பேரவையின் நிறுவனத் தலைவர் கண்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்து, வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர்களின் பேரவையின் முழுமையான ஆதரவு நம் NDA கூட்டணிக்கே இருக்கும் என உறுதியளித்தார்.
மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட பல்வேறு சமூக மற்றும் அரசியல் இயக்கங்கள், தற்போதைய விடியா திமுக ஆட்சியை 2026ஆம் ஆண்டு மாற்ற வேண்டும் என்ற நோக்கில் நம் NDA கூட்டணிக்கு ஆதரவாக திரளாக இணைந்து வருகின்றன. இந்த வளர்ச்சி, நம் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நம்பிக்கையையும் ஆதரவையும் உறுதியாக வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அந்தப் பதிவில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

