Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»நாட்டு நடப்பு தெரியாமல் விஜய் நடனமாடிக் கொண்டிருக்கிறார் – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்

நாட்டு நடப்பு தெரியாமல் விஜய் நடனமாடிக் கொண்டிருக்கிறார் – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்

February 2, 20263 Mins Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாட்டு நடப்பு தெரியாமல் விஜய் நடனமாடிக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மேலும் அவர், “தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். இன்று தவெக 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர், தமிழகத்தின் கலாசாரம் என்ன என்பதே தெரியாமல் நடனமாடிக் கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழக முதல்வர் கடந்த ஐந்து வருடத்தில் மத்திய அரசு நமக்கு ஏதாவது தந்து இருக்கு என்று சொல்லி இருக்கிறாரா? இதுவரைக்கும் சொல்லியதில்லை. தூத்துக்குடி விமான நிலையம் 350 கோடி ரூபாய் திருச்சி விமான நிலையம் 650 கோடி ரூபாய் பதினோரு வந்தே பாரத் ரயில்கள். பட்ஜெட்டுக்கு முன்பு 11 மருத்துவக் கல்லூரிகள் ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் நான் பிரதமரை சந்தித்து வாங்கி வந்து உள்ளேன் என கூறியிருக்கிறாரா?

ஏதாவது வேண்டுமென்று இவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்களா? தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கொடுக்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் மத்திய அரசு இன்று இலவசமாக கொடுக்கிறார்கள். தமிழகத்தில் திமுக ஸ்டிக்கர் ஒட்டி இன்றைக்கு தாங்கள் கொடுப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு எல்லோருக்கும் வீடு கொடுக்கிறார்கள், பாரதப் பிரதமருடைய வீடு அதில் மத்திய அரசு பங்கு 60% திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன சொன்னார்கள். சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறினார்கள். சொத்து வரியை 300 சதவீதம் உயர்த்தி உள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று கூறினார்கள். இன்றைக்கு 300 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தியுள்ளார்கள். வீட்டு வரி உயர்வு என அனைத்தையும் கூட்டிவிட்டு எதுவுமே தரவில்லை எதுவுமே தரவில்லை என்று கூறுகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அற்புதமான முறையில் பட்ஜெட் தந்துள்ளார். ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் ஏற்படுத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூறியுள்ளார். இதுவரை இல்லாத வகையில் கனிம வளங்களை கண்டறிந்து அதை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் எனல் கூறியுள்ளனர். மருத்துவத் துறைக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்கள். அதிலிருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தொகை என்று பிரித்து கொடுப்பார்கள். ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.

மகளிருக்காக மாவட்டம் தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக விடுதிகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். செமி கண்டக்டரை பொறுத்தவரை 40 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள். செமி கண்டக்டர் தான் உலக அளவில் பொருளாதாரத்தை கட்டமைக்கும் அதற்கு நாற்பதாயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள், பின்னர் அதை பிரித்துக் கொடுப்பார்கள். பட்ஜெட்டை படித்து பார்க்காமல் பட்ஜெட் உள்ளே என்ன உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்காமல் அவர்கள் ஒன்னுமே இல்லை, ஒண்ணுமே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒன்றுமே இல்லாமல்தான் இருப்பார்கள். ஒன்னுமே இல்லாமல் போய்விடுவார்கள்.” என்றார்.

இதையும் படிக்க :  ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ - விருதுநகரில் பாஜக நூதன பிரச்சாரம்

மேலும் பேசிய நயினார் நாகேந்திரன், “தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். இன்றைக்கு தவெக மூன்றாவது ஆண்டு துவக்க விழாவில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்சித் தலைவர் தமிழகத்தின் கலாச்சாரம் தெரியாமல் மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார். நடனமாடிக் கொண்டிருந்தால் நடனமாடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். என்டிஏ என்றால் பாஜக இருக்கிறது, அதிமுக இருக்கிறது, தமிழ் மாநில காங்கிரஸ், மேலும் பல கட்சிகளும் அமைப்புகளும் இருக்கின்றன. இதுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தால் எப்படி?” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க :  தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு 6,630 விண்ணப்பங்களுக்கு அனுமதி

தவெக கட்சியின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. பனையூர் அலுவலகத்தில் தவெக கட்சியின் கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சி அலுவலகத்தில் தவெக கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, பாடகர் வேல்முருகன் இசை நிகழ்ச்சியில் விஜய் உற்சாகமாக நடனமாடினார். இந்நிலையில் விஜய்யின் செயல்பாட்டை விமர்சித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?
Next Article ஈரான் மீது தாக்குதல்… பிராந்திய அளவிலான போர் வெடிக்கும்.. டிரம்புக்கு கமேனி எச்சரிக்கை!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.