வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

