மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர், அரசியல் சாணக்கியர் திரு. அமித் ஷா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தனது திறமையான நிர்வாகத் திறனின் மூலம், நம் பாரத தேசத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சீரான வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் பெரும் தலைவர் திரு. அமித் ஷா அவர்கள்! அகண்ட பாரதத்தை உருவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எண்ணிலடங்காதவை.
திரு. அமித் ஷா அவர்கள் எல்லா நலனும், வளமும் பெற்று இன்புற்று வாழவும், நீண்ட காலம் மக்கள் பணி ஆற்றவும் இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

