டி20 உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குஜராத் அகமதாபாத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக T20 உலகக் கோப்பையை வென்று இந்தியாவின் மகத்தான சாதனையை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பதித்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
உறுதியான முயற்சி, ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்திய இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் பெருமையும் மகிழ்ச்சியும் ஊட்டியுள்ளது.
இந்த மகத்தான வெற்றி இந்திய இளைஞர்களுக்கு புதிய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. இதே உற்சாகத்துடன் எதிர்காலத்திலும் பல வெற்றிகளை குவித்து நம் பாரத நாட்டின் பெருமையை மேலும் உயர்த்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

