தமிழக அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சட்டம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன் சமீப காலமாக வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகளை சந்தித்து வருகிறார். இதன் காரணமாக, அவர் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பி வருகிறார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன் தனது வீட்டில் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளார். இதை தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அமைச்சர் துரைமுருகனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அமைச்சர் துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்து சென்றார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

