Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»பணி நியமனத்தில் முறைகேடு; தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு; தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

March 3, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக எம்.பி இன்பதுரை தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களை முறைகேடாக நியமனம் செய்ததில் சுமார் 1,020 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டதாக அமலாக்கத் துறை பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தது. மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யும் படி 2025 ஜூலை மாதம் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது.

கடிதத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, அதிமுக எம்.பி. இன்பதுரை உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதையும் படிக்க :  20 ஆயிரம் இடங்களில் சக்தி கேந்திரா பிரச்சார கூட்டம்: பாஜக தலைவர்கள் இன்று தொடக்கம்

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை அனுப்பியது புகார் கடிதம் மட்டுமல்ல, சோதனையின் அடிப்படையில் ஆதாரங்களை வழங்கியிருப்பதால் அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிப்ரவரி 20ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், ”நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. மாநில அரசு மற்றும் அமைச்சருக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. அதனால், உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என அதிமுக எம்பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இதையும் படிக்க :  மேல்முறையீடு செய்ய தாமதம் செய்யும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை ரகசியமாக விசாரிக்க கோர்ட் உத்தரவு

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இன்பதுரை தரப்பில், நீதிமன்றம் பிப்ரவரி 20ம் தேதி உத்தரவு பிறப்பித்து 10 நாட்கள் கடந்த பின்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 25ம் தேதி ஒத்திவைத்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபோர் பதற்றம்: துபாயில் சிக்கியிருந்த பி.வி.சிந்து பத்திரமாக நாடு திரும்பினார்
Next Article மோசடி விவகாரம்: அமைச்சர் பி.டி.ஆரின் முன்னாள் உதவியாளர் ஜாமின் மனு ஒத்திவைப்பு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.