Editor's Picksஅறிவியல்இந்தியாஉலகம்சமூகம்வணிகம்

மேட் இன் இந்தியா: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 உற்பத்தியை சென்னையில் தொடங்குகிறது!

டெக் டைட்டன் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 13 தயாரிப்பைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா டெக் உலகில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தி கூட்டாளியான ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் முதன்மை பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளன.

”இந்தியாவில் எங்கள் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்காக ஐபோன் 13-ஐ தயாரிக்க உள்ளோம். அதன் அழகிய வடிவமைப்பு, பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான மேம்பட்ட கேமரா அமைப்புகள் மற்றும் A15 பயோனிக் சிப்பின் அபாரமான செயல்திறனுடன் – தயாரிக்கத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று ஆப்பிள் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு ஐபோன் எஸ்இ மூலம் இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நீண்ட கால வரலாற்றை கொண்டுள்ளது.

ஆப்பிள் தனது ஆன்லைன் ஸ்டோரை செப்டம்பர் 2020 இல் அறிமுகப்படுத்தியது. மேலும், வரவிருக்கும் ஆப்பிள் ஸ்டோரின் தொடக்கத்துடன் நாட்டிற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் அதிகரிக்கத் தயாராக உள்ளதாக கூறியது. ஆப்பிள் நிறுவனம் தற்போது ஐபோன் 11, ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 உள்ளிட்ட சில மேம்பட்ட ஐபோன்களை நமது நாட்டில் தயாரிக்கிறது.

ஃபிளாக்ஷிப் ஐபோன் 13 ஆனது மேம்பட்ட 5G அனுபவத்தைக் கொண்டுள்ளது. அதிவேக செயல்திறன் மற்றும் A15 பயோனிக் சிப், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் அதிக நீடித்த உழைப்புடன் கூடிய பிளாட்-எட்ஜ் வடிவமைப்புடன் கூடிய ஆற்றல் திறன் ஆகியவற்றை வழங்குகிறது. ஐபோன் 13, அமெரிக்காவுடன் ஒரே நேரத்தில் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.

Related posts