Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடல்: பெங்களூரு உணவக சங்கம் அறிவிப்பு

சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடல்: பெங்களூரு உணவக சங்கம் அறிவிப்பு

March 10, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேற்காசியாவில் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை சீரடையாமல் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் உணவகங்கள் இன்று முதல் மூடப்படும் சூழல் நிலவுவதாக பெங்களூரு உணவக சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கம் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘பெங்களூரு உணவகங்களுக்கான வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் பிரிவு, மக்களுக்கான அடிப்படை தேவைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதனால் தங்களது அன்றாட உணவுக்கு உணவகங்களை நம்பியுள்ள மாணவர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர்.

இத்தகைய நிலையில் நிறுத்தப்பட்டுள்ள வர்த்தக எரிவாயு சிலிண்டர் விநியோகம் வழக்கம் போல சீரடையவில்லை என்றால் ஹோட்டல் தொழில் கடுமையாக பாதிக்கும்.

70 நாட்களுக்கு சிலிண்டர் விநியோகம் சீராகாது என எண்ணெய் நிறுவனங்கள் கொடுத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த துறை சார்ந்த அமைச்சகம், அரசு, மக்கள் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இதையும் படிக்க :  தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்தது

எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் இன்று (மார்ச் 10) முதல் பெங்களுருவில் உள்ள உணவகங்கள் மூடப்படும் சூழல் உள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்’ என பெங்களூரு உணவக சங்க தலைவர் பி.சி.ராவ் அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60-ம், வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.114.50-ம் என விலை உயர்ந்தது. இந்நிலையில், பெங்களுருவில் வர்த்தக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  போதைப்பொருள் : சென்னையில் அதிரடி சோதனையில் 31 வியாபாரிகள் கைது !

சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம்? – ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதுதவிர, எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ‘கெயில்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தது. இந்த சூழலில் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களுக்கு சிலிண்டர் விநியோகம் பெங்களுருவில் நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article60 வயது பாட்டிக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை! நயினார் நாகேந்திரன் தாக்கு
Next Article தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.