தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கிறது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி கிராமுக்கு ரூ.30ம், பவுனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 300-க்கும், ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு பவுன் ரூ.91,280 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,410 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.167 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

