சமூகம்சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி!

புதிய படம்

வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள வாரிசு படத்தை அடுத்து விஜயின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றதாகவும், தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் விஜய் 50 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், 6 முன்னணி நடிகர்கள் வில்லன்களாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ஜெயம் ரவிக்கு ஒரு கதை சொல்லியுள்ளதாகவும், விஜய் படத்திற்கு பிறகு இத்திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Related posts