சட்டசபையில் கிட்னி திருட்டு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.
ஏழை மக்களின் கிட்னியை திருடிய மருத்துவமனை மீது தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசின் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் பாதிக்கப்பட்டோரை விசாரித்துள்ளனர்.
கிட்னி முறைகேடு நடந்துள்ளதை விசாரணை குழு உறுதி செய்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையை தொடங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

