“மாற்று திறனாளிகளை கேலி செய்து பேசவில்லை” -மன்னிப்பு கேட்ட கே. பாக்கியராஜ்!
இயக்குனர் பாக்யராஜ் “நான் மாற்றுத்திறனாளிகள் குறித்து எதுவும் தவறாக பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. எனது பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
கே. பாக்கியராஜ் -ன் சர்ச்சையான பேச்சு
சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ‘பிரதமர் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022’ என்னும் புத்தக வெளிட்டு விழாவில் கே. பாக்கியராஜ் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘ திரு.மோடி அவர்கள் தன்னை பற்றிய எதிர் விமர்சனங்களை எண்ணி கவலைப்படாமலும், செவி சாய்க்காமலும் தன் வேலையை செய்துகொண்டிருக்கிறார். மோடியை குறை சொல்பவர்கள் 3 மாத குறை பிரசவத்தில் பிறந்தவர்கள். 3 மாதத்தில் பிறந்தவர்கள் என்று ஏன் சொல்கிறேன் என்றால், 3 மாத குழந்தைகளுக்கு தான் காது, வாய் இருக்காது என்று சர்ச்சையாக பேசினார்.
கிளம்பிய எதிர்ப்பு
இதை கேட்ட மாற்றுத்திறனாதிகள் மிகவும் வேதனை அடைந்தனர். திரு.பாக்கியராஜ் குறை பிரசவம் என்ற வார்த்தையை கூறி மாற்றுத்திறனாளிகளை கேலி செய்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், இதுகுறித்து பேராசிரியர் தீபக் நாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாக்கியராஜை சாட்டி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி ! அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா நடிகர் பாக்கியராஜ் அவர்களே? அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்ச்சி pic.twitter.com/pI3xAw2S8E
— பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN) April 20, 2022
அதில், “மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளின் வலியும், அக்குழந்தைகளின் பெற்றோர் வலியும் திரு.பாக்கியராஜ்க்கு தெரியுமா? மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை கேலி செய்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். மேலும், அரசியலில் உங்கள் எதிரிகளை விமர்சிக்க எங்களது ஊனத்தை கையில் எடுக்கிறீர்கள்? நாங்கள் இயற்கையின் அங்கமில்லையா? எங்களுக்கும் மான உணர்ச்சி உள்ளது ஐயா!” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாக்கியராஜ் மன்னிப்பு
இந்நிலையில் பாக்கியராஜ் பேசியது சமூகவலைத்தளத்தில் மிக பெரிய விவாதத்திற்கு உள்ளானது. உடனே பாக்கியராஜ் இதுகுறித்து மன்னிப்பு கேட்டு வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் குறை மாசம் என்று குறிப்பிட்டது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என்றும், கிராமப்புறங்களில் 8 மாதம், 9 மாதம் பிறந்த குழந்தைகளை தான் குறை பிரசவ பிள்ளைகள் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கு குறைகள் ஏதும் இருக்காது என்று கூறியிருந்தார்.
இன்றைய புத்தக வெளியிட்டு விழாவில் நான் பேசிய கருத்துக்களுக்கு என் தன்நிலை விளக்கம். pic.twitter.com/nMlf70kptl
— K Bhagyaraj (@ungalKBhagyaraj) April 20, 2022
மேலும், “நான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் மாற்றுத்திறனாளிகளை அக்கறையுடன் பார்ப்பவன். எப்போதும் அப்படி தான் இருப்பேன். நான் பாஜக கட்சியை சார்ந்தவனல்ல. நான் திராவிட தலைவர்களை பார்த்து வளந்தவன். தமிழகத்தில் பிறந்து, தமிழிலே படித்து, தமிழ் சினிமா பார்த்து வளந்தவன். சினிமாவில் திராவிட இயக்கங்களின் கருத்துகள் இருக்கும். இனியும் அதே தொடரும்” என்று கூறியிருந்தார்.