விஜய் தொலைக்காட்சியின் பிரபல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. தனது பாடல் திறமை மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். ஆனாலும் தனது மழலை பேச்சுக்காகவும், குரலுக்காகவும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவாங்கி.
முதல் சீசனில் கோமாளியாக கலந்துகொண்ட சிவாங்கி, தனது இயல்பான செயல்கள் மூலம் மக்களை மகிழ்வித்தார். அதுமட்டுமன்றி தன் குரலுக்காக அவர் சந்தித்த விமர்சனங்கள் அனைத்தும் மறையத் தொடங்கின. அதன்பிறகு அவரது குழந்தைத்தனமான செயல்கள் இயல்பானவை என்று உணர்ந்துகொண்ட மக்கள் அவருக்கு மிகவும் ஆதரவு அளித்தனர்.

குக் வித் கோமாளி முதல் சீசனில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி படிப்படியாக முன்னேறி குக் ஆக மாறினார். தன் சமையல் திறமைக்காக பாராட்டுகளையும் பெற்றார். அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பது, பாடல் பாடுவது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிசியாக உள்ளார்.

இதற்கிடையே தான் சிவாங்கி காதலில் விழுந்திருக்கிறார் என ரசிகர்கள் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் சிவாங்கி பகிர்ந்த புகைப்படம் தான்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகேஷ் ரவி என்பவரைக் கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்டிருக்கிறார். இதனை வைத்தே அவர் காதலில் விழுந்துவிட்டாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் ஒரு சிலரோ அவர்கள் இருவரும் புதிய ஆல்பம் ஒன்றில் பணியாற்றி வருவது போலவும் பதிவிட்டுள்ளனர். எனினும், சிவாங்கி கட்டியணைத்து இருக்கும் நபரான முகேஷ் ரவி ‘கம்பி கட்ன கதை’ படத்தின் நடிகர். அது மட்டுமில்லாமல், 2023ல் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றதாகவும் முகேஷ் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.