இந்தியா சிறந்த நாடு, அந்நாட்டின் பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர் என்று காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி முன்னிலையில், வரலாற்று சிறப்புமிக்க காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டிரம்ப் அப்தெல் பட்டா அல் சிசியுடன் துருக்கி அதிபர் எர்டோகன் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ள ஷரத்துகள் பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவையும் பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார். அவர் உரையாற்றும் போது பின்னால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நின்று கொண்டு இருந்தார்.
டிரம்ப் பேசுகையில், இந்தியா மிகவும் சிறந்த நாடு. என் நல்ல நண்பர்கள் என்ற பட்டியலில் உச்சத்தில் இருப்பவர் பிரதமர் மோடி. அவர் அற்புதமான ஒரு வேலையை செய்திருக்கிறார். பாகிஸ்தானும், இந்தியாவும் மிகவும் நன்றாக வாழப்போகிறார்கள் என்று நினைக்கிறேன்.

