Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாகிறது

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாகிறது

February 5, 20262 Mins Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறி இருப்பதாவது: இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் டெல்லிக்கு வர இருக்கிறார்கள். ஒப்பந்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

விவசாயம், பால் வளம், மீன்வளத்துறை ஆகியவற்றில் இந்திய அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. நமது நாட்டின் விவசாயிகள், மீனவர்களின் நலன்கள் போதுமான அளவு பாதுகாக்கப்பட்டுள்ளன. ஓமன், பிரிட்டன், நியூசிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இதற்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திலும் அந்த நாடுகளுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படிக்க :  முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம் - முக்கிய தலைவர்கள் சந்திப்பு !

முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்களை கொள்முதல் செய்யவும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

வெள்ளை மாளிகையில் செவ்வாய் கிழமை (பிப். 3) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட், ‘‘அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடியுடன் சிறப்பான ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தினார். அதன்மூலம், இந்தியாவுடன் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியுடன் அவர் நேடியாகப் பேசினார். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நல்ல உறவை கொண்டிருக்கிறார்கள். அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடனான உறவை மிகவும் விரும்புகிறார், பிரதமர் மோடி மீதும் இந்தியா மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவிடம் இருந்தும், வெனிசுலாவிடமிருந்தும்கூட எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இது அமெரிக்காவுக்கும் அமெரிக்க மக்களுக்கும் நேரடி பலன்களைத் தரும். வெனிசுலாவின் வர்த்தகத்தையும், அதன் எண்ணெய் விற்பனையையும் அதிபர் ட்ரம்ப்பும் அவரது தேசிய பாதுகாப்புக் குழுவும் நேரடியாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிக்க :  “எப்போது இந்தியா திரும்புவேன் என கூற முடியாது” - மும்பை உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தகவல்

எரிசக்தி, போக்குவரத்து, விவசாயப் பொருட்கள் ஆகியவற்றை 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்ய மோடி உறுதி அளித்துள்ளார். இந்தியா மீதான அமெரிக்க வரி 18% ஆக இருக்கும். அதேநேரத்தில், அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு இந்தியாவில் பூஜ்ஜிய வரி விதிக்கப்படும். எனவே இது ஒரு சிறந்த ஒப்பந்தம். அமெரிக்க தொழிலாளர்கள், வணிகங்கள், நுகர்வோர் அனைவருக்கும் இது ஒரு பெரிய வெற்றி’’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட S.I. தற்கொலை
Next Article எது உண்மையான கிரிக்கெட் வர்ணனை? – தோனியின் ‘ஹெலிகாப்டர் ஷாட்’ பதில்!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.