Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்

September 29, 20252 Mins Read26 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்கார் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, சிறப்பாக விளையாடிய பர்கான் அரைசதமடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. பர்கான் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சைம் அயூப் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பகார் ஜமானும் 46 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 114-2 என வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, அடுத்த 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையும் படிக்க :  ஆசிய கோப்பை ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி போராடி வெற்றி

இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில்லும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் வெறும் 12 ரன்களில் அவுட்டானார்.

இதையும் படிக்க :  பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவீர்களா? சூர்யா கொடுத்த 'நச்' பதில்

தொடர்ந்து வந்த திலக் வர்மாவும், சஞ்சு சாம்சனும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்களில் சஞ்சு சாம்சன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அரை சதம் அடித்தார். அவருக்கு சிவம் துபே பக்கபலமாக இருந்து 33 ரன்கள் எடுத்தார்.

கடைசி வரை களத்தில் இருந்த திலக் வர்மா 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.

இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

asia cup Asia Cup T20 India Champion
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிமுக தனது 4 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் எதையும் சரிவர கவனிக்கவில்லை – அண்ணாமலை
Next Article கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.