அரசியல் நிர்ணய சபை
1858 முதல் 1947 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் உருவானது. போராட்டத்தில் நாளடைவில் வெற்றியும் கண்டது.
இந்தியாவிற்கு சுதந்திரம் தருவது குறித்து ஆராய இந்தியா வந்த கிரிப்ஸ் தூதுக்குழு, தற்காலிக அரசு மற்றும் அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையின் படி, டிசம்பர் 1946 இல் அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 13 – 1946 இல் கூடியது. சபையின் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்ஹா பொறுப்பேற்றார். அதன் பிறகு டிசம்பர் 11 – 1946 இல் நிரந்தர தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்ட வரைவுக்குழு
ஆகஸ்ட் 29, 1947 -இல் அரசியல் நிர்ணய மன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீம்ராவ் அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட “அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு” உருவாக்கப்பட்டது.
பீம்ராவ் அம்பேத்கர், என். கோபாலசாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே. எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, என். மாதவ ராவ், டி. டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டம்
இந்திய அரசியலமைப்பின் வரைவை தயார் செய்வதற்குள் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் ஓடியது. அதன் பின்னர், வரைவுக்குழு தயாரித்த அறிக்கை, அரசியல் நிர்ணய சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக நவம்பர் 26, 1947 இல் இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.அரசியல் நிர்ணய சபையின் கடைசி கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930, ஜனவரி 26-இல் இந்தியாவிற்குச் சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக, ஜனவரி 26-ஆம் தேதியை இந்தியக் குடியரசு நாளாக அரசியல் நிர்ணய சபை அறிவித்தது. “இந்திய அரசியலமைப்பு சட்டம் ” இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.
அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பம்சம்
இந்திய அரசியலமைப்பானது, 22 பகுதிகளையும், 12 அட்டவணைகளையும், 448 கும் மேற்பட்ட சரத்துகளையும் கொண்டுள்ளது. இதுவே உலகில் மிக நீளமான அரசியல் அமைப்பு சாசனமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டம், நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மையைக் கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம், பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகளை கொண்டு உருவாக்கப்பட்டது . ‘கூட்டாட்சி முறையைக்’ கனடாவில் இருந்தும், ‘அடிப்படை உரிமைகள்’ அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையைத் தென்னாப்பிரிக்காவில் இருந்தும், மாநிலங்களவை நியமன எம்.பி. க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் “வணிக முறையை” ஆஸ்திரேலியாவிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது.