22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,120 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,21,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் போர் பதற்றம் காரணமாக உலக நாடுகளிடையே வணிக பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள நிலையில் கடல்வழி வணிகத்தில் தாமதம் ஏற்படும் என பல்வேறு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. பொதுவாக போர் நடைபெற்றால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேர்ந்தெடுக்கும் நோக்கில், தங்கத்தின் மீது முதலீடு செய்வர்.
ஆனால் இப்போது போர் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. அதேநேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. போர் தொடங்கிய முதல் நாளில் தங்கம் விலை உச்சம் தொட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் விலை குறைந்து வருகிறது.
தங்கம் விலை
ஆபரண தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 3) கிராமுக்கு ரூ. 195 குறைந்து ஒரு கிராம் ரூ. 15,465க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 265 குறைந்து ஒரு கிராம் ரூ. 15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 1,480 குறைந்து ரூ. 1,23,720க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 2,120 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,21,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
நேற்று வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ. 315க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 20 குறைந்து, ஒரு கிராம் ரூ. 295க்கு விற்கப்படுகிறது. அதன்படி, கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,95,000க்கு விற்கப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் – ரூ. 15,200
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் – ரூ. 1,23,720
வெள்ளி 1 கிராம் – ரூ. 295
வெள்ளி 1 கிலோ – ரூ. 2,95,000

