கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 1,16,640க்கு விற்பனையாகிறது.
இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தினந்தோறும் அதிகரித்து, நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், ஜனவரி மாத இறுதியில் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிவிகித மாற்றம் காரணமாக தங்கம் விலை சற்று குறைந்தது. அதனைத் தொடர்ந்து, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மேலும் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பங்குச்சந்தை மாற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை காலை, மாலை என இருநேரம் மாற்றம் கண்டு வருகிறது.
தங்கம் விலை
வாரத்தின் முதல் நாளான நேற்று (பிப்.9) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 230 அதிகரித்து ரூ. 14,650க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 1,840 அதிகரித்து ரூ. 1,17,200க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கடந்த மாதத்தில் உச்சபட்சமாக கிராமுக்கு ரூ.425 என விற்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து குறைந்தது. இடையிடையே சற்று ஏற்றம் காணப்பட்டாலும், தற்போது ஒரு கிராம் விலை ஏறத்தாழ ரூ. 3 லட்சத்தில்தான் இருக்கிறது. அதன்படி, நேற்று ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 3,00,000க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

