இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.197-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.206-க்கும், ரூ.9 ஆயிரம் உயர்ந்து ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் வெள்ளி விற்பனையாகியது.
வெள்ளி முதல்முறையாக கிலோவுக்கு ரூ.2 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டிருந்தது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

