தங்கம் விலை கடந்த 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.82,000 தாண்டி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
அதன் பிறகும் விலை உயருமோ என நினைத்த நேரத்தில், கடந்த சில நாட்களாக சற்று குறைந்து காணப்பட்டது
நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் உச்சமாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ,82,320-க்கு விற்பனையானது.
ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,290-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று வார விடுமுறை என்பதால், விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மீண்டும் புதிய உச்சம் இந்த நிலையில், தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ,82,880-க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.143-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.148-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

