அமமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
கூட்டம் அறிவிப்பு
இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில், 15ம் தேதி காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், கடந்த மாதத்தில் அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்ற அதே மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கழகத்தின் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் : வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை, வானகரத்தில் நடைபெறுகிறது. pic.twitter.com/D13hC4Ehh6
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 4, 2022

