Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ராஜஸ்தானில் கணவர் கொலையை விபத்தாக ஜோடித்த மனைவி உட்பட 4 பேர் கைது: நடந்தது என்ன?

ராஜஸ்தானில் கணவர் கொலையை விபத்தாக ஜோடித்த மனைவி உட்பட 4 பேர் கைது: நடந்தது என்ன?

February 6, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் ஆஷிஷை (27) கொலை செய்து, அதை சாலை விபத்தாக ஜோடித்த மனைவி அஞ்சு என்கிற அஞ்சலி (23) மற்றும் அவரது ஆண் நண்பர் சஞ்சு என்கிற சஞ்சய் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த மாதம் 30-ம் தேதி ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் நடந்துள்ளது. முதலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆஷிஷ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து சாலை விபத்து வழக்காக இந்த சம்பவத்தை போலீஸார் பதிவு செய்தனர்.

உயிரிழந்த ஆஷிஷின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவரது உடலில் இருந்த காயங்கள் சாலை விபத்தால் ஏற்பட்டது அல்ல என்பதும், கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பதும் உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியானது. இதையடுத்து இந்த வழக்கை வேறு கோணத்தில் போலீஸார் விசாரித்தனர்.

நடந்தது என்ன? – இந்த கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அம்ரிதா துஹான் கூறியதாவது: மூன்று மாதங்களுக்கு முன்னர் (அக்.30) கொலை செய்யப்பட்ட ஆஷிஷ் மற்றும் அஞ்சு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் அஞ்சுவுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. அவர் சஞ்சுவை நேசித்துள்ளார். இந்த விவகாரம் அஞ்சுவின் குடும்பத்தினருக்கும் தெரியும். இந்த சூழலில்தான் திருமணம் நடந்துள்ளது.

இதையும் படிக்க :  ஜம்முகாஷ்மீரில் பெரும் விபத்து - 6 ராணுவ வீரர்கள் பலி !

திருமணத்துக்கு பிறகு சஞ்சுவை சந்திக்கும் நோக்கில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய விரும்புவதாக ஆஷிஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அஞ்சு தெரிவித்துள்ளார். அதற்கு ஆஷிஷ் மறுத்துவிட்டதாக தகவல்.

இதன் பின்னர் தாய் வீட்டுக்கு சென்றார் அஞ்சு. அங்கு சஞ்சுவை சந்தித்து ஆஷிஷை கொலை செய்வது குறித்து திட்டமிட்டுள்ளார். பின்னர் கணவர் வீட்டுக்கு வந்த அஞ்சு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தங்கள் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். அன்று மாலை நடைப்பயிற்சி செல்வதாக சொல்லி சென்றுள்ளார். அவருடன் ஆஷிஷ் சென்றுள்ளார்.

முன்கூட்டியே இதுகுறித்து சஞ்சுவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கு ஏற்கெனவே சஞ்சு மற்றும் அவரது நண்பர்கள் ரோஹித், சித்தார்த் ஆகியோர் காத்திருந்தனர்.

இதையும் படிக்க :  பிப். 17ல் வங்கதேச பிரதமராக பதவியேற்கிறார் தாரிக் ரஹ்மான் - பிரதமர் மோடிக்கு அழைப்பு

அப்போது ஆஷிஷை தாக்குமாறு அஞ்சு சிக்னல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவரை சஞ்சு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தாக்கியுள்ளனர். மஃப்ளரை பயன்படுத்தி ஆஷிஷின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் சிக்கக் கூடாது என்பதற்காக கொலை வழக்கை விபத்து போல சித்தரித்துள்ளனர்.

அதேநேரத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஆஷிஷின் செல்போன் மற்றும் தனது காதணி (கம்மல்) பறிக்கப்பட்டதாக அஞ்சு தெரிவித்தார். அவரது இந்த முரண்பட்ட கருத்து காரணமாக விசாரணை வளையத்துக்குள் அஞ்சு கொண்டுவரப்பட்டார். அவரது போனின் அழைப்பு விவரங்களை சரி பார்த்ததில் சஞ்சுவுடன் தொடர்ந்து பேசி வந்தது தெரிந்தது.

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் இந்த கொலையில் தொடர்புடைய அஞ்சு, சஞ்சு, ரோஹித், சித்தார்த் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த குற்றத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவதில் போலீஸார் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமுகத்தில் படுகாயமடைந்த பென் ஸ்டோக்ஸ் – நடந்தது என்ன?
Next Article ‘‘சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ உடன் இணைக்க நடவடிக்கை’’ – அஸ்வினி வைஷ்ணவ்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.