திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி வெங்கடாசலம் சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.
சாலை விபத்து
அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் சாலை விபத்தில் காயமடைந்தார். பவானி அருகே வாய்க்கால்பாளையத்தில் கார் விபத்துக்குள்ளானதில் ஏ.ஜி.வெங்கடாசலம் கை எலும்பில் விரிசல் ஏற்பட்டது. காயமடைந்த ஏ.ஜி.வெங்கடாசலம், கார் ஓட்டுநர் கார்த்திக் ஆகியோர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

