Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“ரயில்வே திட்டங்கள் தாமதமாக தமிழக அரசே காரணம்’’ – ஸ்டாலினுக்கு அஸ்வினி வைஷ்ணவ் பதில்

“ரயில்வே திட்டங்கள் தாமதமாக தமிழக அரசே காரணம்’’ – ஸ்டாலினுக்கு அஸ்வினி வைஷ்ணவ் பதில்

February 10, 20262 Mins Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என தெரிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக அரசின் ஒத்துழைப்பின்மையே ரயில்வே திட்டங்கள் தாமதமாவதற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக்கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. 2014ம் ஆண்டில் இருந்து மாநிலத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2026-27 நிதி ஆண்டில் இது ரூ. 7,611 கோடியாக உயரும்.

ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. தற்போது நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலத்தில் 24% மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது, தேவைப்படும் 4,326 ஹெக்டேர் நிலத்தில் 1,052 ஹெக்டேர் நிலம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் தமிழக அரசிடம் நிலுவையில் உள்ளதால் பல முக்கிய திட்டங்கள் தாமதமாகி வருகின்றன.

இதையும் படிக்க :  எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் கருத்துக்கு விளக்கம் கொடுத்த அண்ணாமலை ! !

நிதிப் பற்றாக்குறையால் ரயில்வே திட்டங்கள் முடங்கவில்லை. அவ்வாறு கூறுவது ஆதாரமற்றது. பல திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதே முக்கிய பிரச்சினையாக உள்ளது. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான (144 கி.மீ.) புதிய ரயில்வே இருப்புப் பாதை திட்டத்துக்கு 91% நிலம் கையகப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளது. இதேபோல், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கான 71.33 கி.மீ. நீளம் கொண்ட புதிய ரயில்வே இருப்புப்பாதை திட்டத்துக்கு 86% நிலம் கையகப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த 2019ல் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டின் ஒத்துழைப்பின்மை காரணமாக இந்த திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை.

இத்தகைய சவால்கள் உள்ளபோதிலும், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு பல புதிய வழித்தடங்கள், இரட்டிப்புப் பாதைகள், 3வது மற்றும் 4-வது வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஆதரிப்பதற்காக மேலும் திறன் விரிவாக்கத்துக்கான வரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க :  இபிஎஸ் தரப்பினரால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து - புகழேந்தி !

தமிழ்நாட்டில் மொத்தம் 77 ரயில் நிலையங்கள் முழுமையாக மறுவடிவமை செய்யப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், 18 நிலையங்களுக்கான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. 2014 முதல் தோராயமாக 1,350 கி.மீ. ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் ரயில்வே 97% மின்மயமாக்கலை எட்டியுள்ளது. 2014 முதல் 2,386 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன ரயில்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு மேம்பட்ட, மலிவான ரயில் பயணத்தை உறுதி செய்கின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 9 ஜோடி சேவைகள் தற்போது இயக்கத்தில் உள்ளன. அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸின் 9 ஜோடி சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு தயாராகவும் உறுதியாகவும் உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு வேகமான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்குவதற்கு மாநில அரசின் சரியான நேரத்திலான ஆதரவு அத்தியாவசியமாகிறது’’ என தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகேரளாவில் ரூ.50,000 மாமூல் தர மறுத்ததால் மசாஜ் மைய பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது
Next Article “கல்லூரிக்கு வேண்டுமானால் விஜய்யை முதல்வராக்கலாம்” – செங்கோட்டையனை கலாய்த்த செல்லூர் ராஜு

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,606 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,606 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.