Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»போரில் எங்களது ‘தற்காப்பு நடவடிக்கை’ தேவைப்படும் வரை தொடரும்: ஐ.நா.-வில் ஈரான் திட்டவட்டம்

போரில் எங்களது ‘தற்காப்பு நடவடிக்கை’ தேவைப்படும் வரை தொடரும்: ஐ.நா.-வில் ஈரான் திட்டவட்டம்

March 27, 20262 Mins Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஈரானுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக உலகம் ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, “தேவைப்படும் வரை ஈரான் தன்னை தற்காத்துக் கொள்ளும்” என்று கூறியுள்ளார்.

ஈரானில் பெண்கள் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றிய சையத் அப்பாஸ் அராக்சி, ‘‘அநீதிகளுக்கு முன்னால் காட்டப்படும் அலட்சியமும் மவுனமும் எந்த பாதுகாப்பையும் அமைதியையும் கொண்டு வராது. அது மேலும், பாதுகாப்பின்மையையும் உரிமை மீறல்களையும் வரவழைக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையும், அதன் அடிப்படைக் கோட்பாடுகளும், ஒட்டுமொத்த மனித உரிமை கட்டமைப்பும் கடுமையான ஆபத்தில் உள்ளன. நீங்கள் அனைவரும் ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டித்து, ஈரானியர்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் வெறுக்கத்தக்க குற்றங்களுக்கு அவர்களை பொறுப்பாக்க வேண்டும்.

இதையும் படிக்க :  பேஸ்புக்கில் 11000 ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்!

ஈரான் ஒருபோதும் போரை நாடியதில்லை. ஈரானியர்கள் பூமியில் உள்ள வளமான நாகரிகங்களில் ஒன்றைப் பெற்ற ஓர் அமைதியான, உன்னதமான தேசத்தவர்கள். எனினும், கொடூரமான குற்றவாளிகளுக்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக் கொள்ள அவர்கள் முழுமையான உறுதியையும் தீர்மானத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். தேவைப்படும் வரை ஈரான் தன்னை தற்காத்துக் கொள்ளும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் ராணுவ தரவு அமைப்புகளையும் கொண்ட நாடுகள். அந்த நாடுகளால் ஈரான் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது திட்டமிட்டது; வேண்டுமென்றே செய்யப்பட்டது. இந்த கொடூரத்தை நியாயப்படுத்தவோ, மறைக்கவோ முடியாது. மவுனத்துடனோ அலட்சியத்துடனோ இதை எதிர்கொள்ளக்கூடாது.

இதையும் படிக்க :  இன்ஸ்டாகிராம் புதிய நடைமுறையை அறிமுகம் - மெட்டா

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில் செஞ்சிலுவைச் சங்க மீட்புப் பணியாளர்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனைகள், சுகாதாரப் பணியாளர்கள்,நீர் ஆதாரங்கள், குடியிருப்புப் பகுதிகள் உள்பட பல பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டுள்ளன.ஈரான் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இடிக்கப்பட்டுள்ளன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்.

ஈரானுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களின் ஆழத்தை விவரிக்க போர்க்குற்றம் என்ற வார்த்தை போதாது. ஆக்கிரமிப்பாளர்களின் இலக்கு வைக்கும் முறையும் அவர்களின் சொல்லாடல்களும் இனப்படுகொலை செய்வதற்கான அவர்களின் தெளிவான நோக்கத்தில் சிறிதும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. இது ஈரானுக்கு எதிரான தன்னிச்சையான நியாயமற்ற போர்’’ எனத் தெரிவித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிமுகவில் 127 வேட்பாளர்கள் அறிவிப்பு: 2-ம் கட்ட முழு பட்டியல்
Next Article அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் : சிவகாசி தொகுதியில் கே.டி.ராஜேந்திர பாலாஜி போட்டி

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.