சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.
அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

