Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»‘விஜய்க்கு மிகப்பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது’ – நடிகர் அனுமோகன் விமர்சனம்!

‘விஜய்க்கு மிகப்பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது’ – நடிகர் அனுமோகன் விமர்சனம்!

February 3, 20262 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது என்று நடிகர் அனுமோகன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

‘ரெட் லேபிள்’ திரைப்படம் வருகிற பிப்.6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு  சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில், படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான லெனின், கதாநாயகி அஸ்மின், இசையமைப்பாளர் கைலாஷ் மேனன், குணச்சித்திர நடிகர் அனுமோகன், கதை ஆசிரியர் பொன் பார்த்திபன் மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய கதை ஆசிரியர் பொன் பார்த்திபன், ” கதை ஆசிரியரே படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. கடந்த காலங்களில் கே. பாக்யராஜ், மணிவண்ணன் போன்ற ஜாம்பவான்களே தங்களுடைய கதையினை வேறு ஒரு இயக்குநரிடம் கொடுத்து வெற்றி கண்ட பிறகு தான் இயக்குநராக மாபெரும் வெற்றியை பெற்றார்கள். அந்த வகையில் இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமையும்.” என்றார்.

படத்தின் ‎கதாநாயகனும், தயாரிப்பாளருமான லெனின், ” ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கிறேன். இதில் எனக்கு எந்தவிதமான லாபமும் கிடைக்க வேண்டாம். பொதுமக்கள் இந்த படத்தை திரையரங்கம் வந்து பார்க்க வேண்டும் என்கின்ற முனைப்போடு எடுத்திருக்கிறேன். 2023 இல் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்பொழுது தான் வெளியாக உள்ளது. மேலும் காலம் தாழ்த்தினால் இந்த படத்தில் உள்ள பல காட்சிகள் பல திரைப்படங்களில் வந்துவிடும்.

இதையும் படிக்க :  பேரறிவாளனை யார் விடுதலை செய்யப்போவது ? - உச்சநீதிமன்றம் காட்டம் !
மேலும், இந்தப் படத்தின் தலைப்பினை நாங்கள் படப்பிடிப்பு துவங்கும் முன்பாக பதிவு செய்திருந்தோம். திரைப்படம் வெளியாகும் பொழுது படத்தின் தலைப்பு வைக்கப் போனால், எங்களுக்கு ஓர் அழைப்பு வந்தது. அதாவது தலைப்பிற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. புதிதாக அதனை புதுப்பிக்க வேண்டும் என கூறுகிறார்கள். அப்படி புதுப்பிப்பதற்கு இணையதளம் சார்ந்த வசதிகளை செய்தால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அதனை முறைப்படுத்த கோரிக்கை வைக்கிறேன். அப்படி முறைப்படுத்த, முடியவில்லை என்றால் நானே அதை இலவசமாக செய்து கொடுக்கிறேன். இந்த காலகட்டத்தில் திரைப்படம் வெளியிடும் பொழுதே வெற்றி நடை போடுகிறது என்று போஸ்டர் டிசைன் செய்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னுடைய திரைப்படம் உண்மையாகவே வெற்றி நடை போட்டால் அந்த சமயத்தில் நான் போஸ்டர் டிசைன் செய்து கொள்கிறேன்.” என்றார்.

நடிகர் அனுமோகன் பேசுகையில், ” எனக்கு ஜோதிடம் தெரிந்ததால் சொல்கிறேன். 2026 தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாக அமையும். ‘கிரீன் லேபிள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமையும்.” என்றார். அப்போது, படத்தின் தலைப்பை தவறாக சொல்கிறீர்கள் என மேடையில் அமர்ந்திருந்த படக்குழுவினர் சுட்டிக்காட்டினர்.

இதையும் படிக்க :  தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு : தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை தமிழகம் வருகை

அதற்கு பதில் அளித்த அனுமோகன், ”எனக்கு கிரீன் லேபிள் தான். மதுப்பழக்கம் உள்ளவர்கள் வேண்டுமானால் ‘ரெட் லேபிள்’ என பெயர் வைத்துக்கொள்ளட்டும். என்னை பொறுத்தவரை இந்த திரைப்படம் கிரீன் லேபிள் தான்.” என நகைச்சுவையாக கூறினார்.

‎அதை தொடர்ந்து, 2026 சினிமா உலகில் மாற்றம் ஏற்படும் என்று சொல்கிறீர்களே, அரசியல் களத்தில் அதேபோல மாற்றம் ஏற்படுமா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அனுமோகன், நிச்சயமாக மாற்றம் ஏற்படும், ஆனால் நீங்கள் எதிர்பார்க்கின்ற மாற்றம் நிகழாது. தற்பொழுது அனைத்து ஊடகங்களிலும் ஒருவரின் பெயரை அதிகமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறதல்லவா? அவருக்கு மிகப்பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது என மறைமுகமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை விமர்சித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.7611 கோடி ஒதுக்கீடு” – தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர்
Next Article பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் செல்லாது – ஆளுநர் ரவி எச்சரிக்கை

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,991 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,991 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.