Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, August 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»சூப்பர் 8 – வெற்றி நெருக்கடியில் இந்திய அணி! ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்

சூப்பர் 8 – வெற்றி நெருக்கடியில் இந்திய அணி! ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்

February 26, 20264 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது 2-வது ஆட்​டத்​தில் ஜிம்​பாப்வே அணி​யுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறுகிறது.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி சூப்பர் 8 சுற்​றில் தனது முதல் ஆட்​டத்​தில் தென் ஆப்பிரிக்க அணி​யிடம் 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. அந்த ஆட்​டத்​தில் 88 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 18.5 ஓவர்​களில் 111 ரன்களுக்கு சுருண்​டிருந்​தது. இந்த தோல்​வி​யால் இந்​திய அணி​யின் நிகர ரன் ரேட் -3.800 ஆக உள்​ளது.

இதனால் அரை இறு​திக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை பெற வேண்​டு​மா​னால் இந்​திய அணி இன்றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் பெரிய அளவி​லான வெற்​றிகளை குவித்​தாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யில் உள்​ளது. டாப் ஆர்​டரில் அபிஷேக் சர்மா​வின் மோச​மான பார்ம் அணி​யின் செயல் திறனை வெகு​வாக பாதித்துள்​ளது.

அவர், 4 ஆட்​டங்​களில் 3-ல் டக் அவுட் ஆகி​யிருந்​தார். தென் ஆப்பிரிக்கா​வுக்கு எதி​ராக 15 ரன்​கள் சேர்த்​திருந்​தார். நடப்பு தொடரில் அபிஷேக் சர்​மாவுடன் சராசரி 3.75 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 75 ஆகவும் உள்​ளது. மந்​த​மான ஆடுகளம், பவர்​பிளே​வில் சுழற்​பந்து வீச்​சாளர்​கள் வேகத்தை குறைத்து வீசுவது உள்​ளிட்​டவை அபிஷேக் சர்மாவுக்கு கடும் சவால்​களை அளித்து வரு​கின்​றன.

லீக் சுற்​றில் இஷான் கிஷன் அதிரடி​யாக விளை​யாடி ரன்கள் குவித்​த​தால் அபிஷேக் சர்மா விரை​விலேயே ஆட்டமிழந்த போதி​லும் அது பெரிய அளவில் அணி​யின் செயல் திறன் தாக்​கத்தை ஏற்​படுத்​தாமல் இருந்​தது.

ஆனால் சூப்​பர் 8 சுற்​றில் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இஷான் கிஷன் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தது நெருக்​கடியை உரு​வாக்​கியது. 3-வது வீரராக களமிறங்கி வரும் திலக் வர்​மா​விடம் இருந்​தும் தொடர்ச்​சி​யாக பெரிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்பட​வில்​லை.

பந்​துகளுக்கு நிக​ராக மட்​டுமே ரன்​கள் சேர்க்​கும் அவர், சூழ்​நிலைக்கு தகுந்​த​படி தாக்​குதல் ஆட்​டம் மேற்கொள்ளாததும் பாதிப்பை ஏற்​படுத்தி உள்​ளது. நடப்பு தொடரில் அவரது ஸ்டிரைக் ரேட் 118 ஆக இருக்​கிறது. இது நவீன​கால டி20 கிரிக்​கெட்​டில் பவர்​பிளே​வில் மிக குறைந்த ஸ்டிரைக் ரேட்​டாக பார்க்​கப்​படு​கிறது.

மேலும் இவர்​கள் 3 பேருமே இடதுகை பேட்​ஸ்​மேன்​கள் என்ப​தால் எதிரணி​யினர் களவியூ​கங்களை எளி​தாக அமைப்​ப​தாக​வும் கருத்து எழுந்​துள்​ளது. இதற்கு இன்றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி தீர்வு காணக்​கூடும். அநேகமாக அபிஷேக் சர்மா அல்​லது திலக் வர்மா நீக்கப்பட வாய்ப்பு உள்​ளது.

இதையும் படிக்க :  பிசிசிஐ யின் மாஸ்டர் பிளான்...சுவாரசியமான விதிமுறைகளோடு களமிறங்கும் 2022 ஐபிஎல் அணிகள்!

இவர்​களுக்கு பதிலாக டாப் ஆர்​டரில் சஞ்சு சாம்​சன் களமிறங்​கக்​கூடும். இதற்கு தகுந்​த​வாறு கடந்த 2 நாட்களாக சஞ்சு சாம்​சன் தீவிர பேட்​டிங் பயிற்​சி​யில் ஈடுபட்​டுள்​ளார். கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ், ஆல்ரவுண்டர் ஹர்​திக் பாண்​டியா ஆகியோ​ரும் கூடு​தல் பொறுப்​புடன் செயல்​பட்டு ரன்​களை குவிப்​ப​தில் கவனம் செலுத்தக்​கூடும்.

சூர்​யகு​மார் யாதவ் நடப்பு தொடரில் 180 ரன்​கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 127 ஆக மட்​டுமே இருக்​கிறது. இதை, அவர் கவனத்​தில் எடுத்துக்கொள்ளக்கூடும். டாப் 3 பேட்​ஸ்​மேன்​கள் 3 பேரும் இடது கை வீரர்​களாக இருப்​ப​தால் இன்​றைய ஆட்​டத்​தில் சூர்​யகு​மார் யாதவ் 3-வது வீர​ராக களமிறங்​கு​வது குறித்தும் சிந்​திக்​கக்​கூடும்.

பந்​து​வீச்​சில் கடந்த ஆட்​டத்​தில் ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப் சிங் வேகக்​கூட்​டணி சிறப்​பாக செயல்​பட்டு இருந்​தது. ஒரு கட்​டத்​தில் எதிரணியை 20 ரன்​களுக்கு 3 விக்​கெட்​கள் என கட்​டுப்​படுத்​திய இந்​திய அணி அதன் பின்​னர் கட்டுக்கோப்​புடன் செயல்​படத் தவறியது.

வருண் சக்​ர​வர்த்​தி, ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் அதிக ரன்​களை வாரி வழங்கினர். அதி​லும் வருண் சக்​ர​வர்த்தி 47 ரன்​களை​யும், ஹர்​திக் பாண்​டியா 45 ரன்​களையும் தாரை வார்த்து இருந்தனர். இதில் ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே ஆகியோர் நோபால்​களை​யும் வீசி​யிருந்​தனர்.

இந்த நோபால்​களும், ஹர்​திக் பாண்​டியா கடைசி ஓவரில் வாரி வழங்​கிய 20 ரன்​களும் பெரிய வித்​தி​யாசத்தை ஏற்படுத்​தி​யிருந்​தன. இன்​றைய ஆட்​டத்​தில் பந்​து​வீச்​சில் மாற்​றங்​கள் இருக்க வாய்ப்பு உள்​ளது. வாஷிங்​டன் சுந்தருக்கு பதிலாக அக்​சர் படேல் களமிறங்​கக்​கூடும்.

சிகந்​தர் ராசா தலை​மையி​லான ஜிம்​பாப்வே அணி லீக் சுற்​றில் தோல்​வியை சந்​திக்​காமல் சூப்​பர் 8 சுற்​றில் கால்பதித்து அனை​வரை​யும் வியக்​க​வைத்​திருந்​தது. எனினும் அந்த அணி சூப்​பர் 8 சுற்​றின் முதல் ஆட்​டத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யிடம் 107 ரன்​கள் வித்தியாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த தோல்​வி​யால் ஜிம்​பாப்வே அணி​யின் நிகர ரன் ரேட் -5.350 ஆக உள்​ளது.

ஜிம்​பாப்வே அணி அரை இறு​திக்கு முன்​னேற வேண்டுமானால் இன்​றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் பெரிய அளவி​லான ரன் ரேட் வித்தியாசத்துடன் வெற்றி பெற வேண்​டும். மேலும் மற்ற ஆட்​டங்​களின் முடிவுக்​காக​வும் காத்​திருக்க வேண்​டும்.

இதையும் படிக்க :  “அபார வெற்றி இது” - WPL பட்டம் வென்ற ஆர்சிபி வீராங்கனைகளுக்கு கோலி வாழ்த்து

ஜிம்​பாப்வே அணி​யில் சுழற்​பந்து வீச்​சாளர்​களாக கிரேம் கிரீமர், சிகந்​தர் ராசா, ரியான் பரூல் ஆகியோர் உள்​ளனர். எனினும் இந்த சுழற்​பந்து வீச்சு கூட்​டணி இந்​திய அணியின் பேட்​டிங் வரிசைக்கு சவால் கொடுக்​கக்​கூடிய அளவில் வலு​வான​தாக இல்லை என்றே கூறப்​படு​கிறது. அதேவேளை​யில் வேகப்​பந்து வீச்​சில் பிளெசிங் முசாராபானி, ரிச்​சர்டு நரவா, பிராட் இவான்ஸ் ஆகியோர் அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.

திருந்​து​வாரா அபிஷேக் சர்மா?

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா 3 ஆட்டத்​தில் ரன் ஏதும் எடுக்​காமல் முதல் ஓவரிலேயே ஆட்ட​மிழந்​தார். சூப்​பர் 8 சுற்​றில் அவர், 15 ரன்​கள் சேர்த்த நிலை​யில் பவர்​பிளே​விலேயே நடையை கட்​டி​னார். எதிரணி​யினர் விரிக்​கும் வலை​யில் அவர், சரி​யாக சிக்குகிறார்.

எந்த ஒரு கட்​டத்​தி​லும் அவர், தனது ஆட்ட பாணியை மாற்றிக் கொள்ள முயற்​சிக்​காதது பலவீன​மாக மாறி உள்ளது. ஆனால் அபிஷேக் சர்மா போன்றே அதிரடி பாணியை கடைபிடிக்​கக் கூடிய இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் ஹாரி புரூக் நேற்று முன்​தினம் சுழலுக்கு சாதகமான பல்​லேகலே மைதானத்​தில் பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அற்​புத​மாக விளையாடினார்.

சுழற்​பந்து வீச்​சில் ஹாரி புரூக் சிறப்​பாக விளை​யாடக்​கூடிய​வர் அல்ல. ஆனால் பாகிஸ்​தானின் சுழற்​பந்து வீச்சு படையை மிரள​வைத்​தார். தற்​காப்பு ஆட்​டத்​துக்​கும், ஆக்ரோஷ ஆட்​டத்​துக்​கும் இடை​யில் தன்னை அற்​புத​மாக நிலை நிறுத்​தி​னார்.

சுழற்​பந்து வீச்​சில் தற்​காப்பு ஆட்​டம் மேற்​கொள்ள வேண்டிய இடத்​தில் அதை செய்​தார். ஆக்​ரோஷம் காட்ட வேண்​டிய இடத்​தில் பந்​துகளை வெளுத்து வாங்கி சதம் அடித்து அணி​யின் வெற்​றிக்கு முக்​கிய பங்​களிப்பை வழங்​கி​னார். இதில் இருந்து அபிஷேக் சர்மா பாடம் கற்றுக்​கொள்​ளக்​கூடும்.

ஆடு​களம் எப்​படி?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் நியூஸிலாந்து – ஆப்​கானிஸ்​தான் அணி​கள் மோதிய லீக் ஆட்​டத்​துக்கு பயன்​படுத்​தப்​பட்ட அதே ஆடுகளமே இன்று இந்​தியா – ஜிம்​பாப்வே அணி​கள் மோதும் ஆட்​டத்​துக்​கும் பயன்​படுத்​தப்பட உள்​ளது.

நியூஸிலாந்து – ஆப்​கானிஸ்​தான் போட்டி காலை 11 மணிக்கு நடத்​தப்​பட்​டிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் 183 ரன்கள் இலக்கை விரட்​டிய நியூஸிலாந்து 13 பந்​துகளை மீதம் வைத்து 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்றிருந்​தது. இந்த உலகக் கோப்பை தொடரில் சேப்பாக்கம் ஆடு​களம்​ மட்​டுமே ரன்​கள்​ குவிப்​புக்​கு பாதகம்​ இல்​லாமல்​ இருந்​து வருகிறது. இதை இந்​திய வீரர்கள்​ பயன்​படுத்திக் கொள்ளக்கூடும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் கொலை! உறவினர் கைது
Next Article சென்னை வரும் பிரதமர் மோடி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,909 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,150 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,095 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,909 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,150 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,095 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.