Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»சாம்பியன்ஸ் லீக் 2026: காலிறுதிக்கு முன்னேறிய அர்செனல், ரியல் மேட்ரிட் மற்றும் பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக் 2026: காலிறுதிக்கு முன்னேறிய அர்செனல், ரியல் மேட்ரிட் மற்றும் பிஎஸ்ஜி

March 18, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ரியல் மேட்ரிட், அர்செனல் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் புகழ் பெற்ற கால்பந்து தொடர்களில் ஒன்றான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றைய தினம் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்றன. அந்தவகையில் மான்செஸ்டர் சிட்டி அணியானது ரியல் மேட்ரிட் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது.

காலிறுதியில் மேட்ரிட்

இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு அணியும் கோலடிக்க முயற்சிக்க ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியது. அதன்பின் ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ரியல் மேட்ரிட் அணிக்காக வினிசியஸ் ஜூனியர் கோலடித்து அசத்தினார். அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய மான்செஸ்டர் சிட்டி அணிக்கு ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் கோலடித்து மிரட்டினார். இதன் காரணமாக முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதையும் படிக்க :  சேப்​பாக்​கத்​தில் இன்று கனடாவுடன் மோதல்: ஆறுதல் வெற்றி முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி

பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்களும் கோலடிக்க கடுமையாக போராடினர். இறுதியில் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+3ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் மீண்டும் கோலடிக்க, மறுபக்கம் இறுதிவரை போராடிய மான்செஸ்டர் சிட்டி அணியால் மேற்கொண்டு கோல்களை பதிவு செய்ய முடியவில்லை. இதன் மூலம் ரியல் மேட்ரிட் அணி 2-1என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்து அசத்தியதுடன், காலிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

அர்செனல், பிஎஸ்ஜி அசத்தல்

இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் மற்றும் லெவர்குசன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த அர்செனல் அணிக்கு ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் எபெரேச்சி எசேவும், ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் டெக்லான் ரைஸும் கோல்களை பதிவு செய்தனர். மறுபக்கம் இறுதிவரை போராடிய லெவர்குசன் அணி கோல்களை அடிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் அர்செனல் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறியது.

இதையும் படிக்க :  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 போட்டி இந்திய அணி தொடரை கைப்பற்றியது

மற்றொரு ஆட்டத்தில் செல்சி மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் அபாரமாக செயல்பட்ட பிஎஸ்ஜி அணிக்கு ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் கிவிச்சா கிவாராட்ஸ்கேலியாவும், ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்தில் பிராட்லி பார்கோலாவும், ஆட்டத்தின் 62ஆவது நிமிடத்தில் செனி மயுலுவும் கோலடித்து அசத்தினர். மறுபக்கம் செல்சி அணி வீரர்களால் எதிரணியின் டிஃபென்ஸை தாண்டி ஒரு கோல் கூட பதிவு செய்ய முடிவில்லை.

சிஎஸ்கே அணியில் நடந்த அதிரடி மாற்றம்: முன்னாள் இங்கிலாந்து வீரருக்கு முக்கிய பொறுப்பு
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச்சுற்றுக்கும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியானது முன்னேறி அசத்தியுள்ளது. இதனையடுத்து இத்தொடரின் காலிறுதி போட்டிகள் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article36 மணி நேரத்துக்குள் சிலிண்டர்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு உத்தரவு
Next Article நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை – கவாஸ்கருக்கு பாக்.வீரர் கண்டனம்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,999 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,999 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.